
நடிகை தமன்னா கிட்டதிட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத்துறையில் கலக்கி வருகிறார்.தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடிக்கக்கூடியவர்.தமன்னா ஹிந்தியில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற ஆந்தாலஜி படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் இணைந்து நடித்துள்ளார். இருவருக்கும் காதலிப்பதாக பல செய்திகள் உலா வந்தன.ஆனால் அதுப்பற்றி இருவருமே எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தான் விஜய் வர்மாவை காதலிப்பதாக ஓப்பனாக கூறியுள்ளார்.எங்களுடைய காதல் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படப்பிடிப்பில் தான் தொடங்கியது .விஜய் வர்மாவுடன் மிக இயல்பான உறவு ஏற்பட்டது. மேலும் அவர் தான் தன்னுடைய ‘ஹேப்பி பிளேஸ்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம் : ஹே சுழலி அழகி! நடிகை அனுபமாவின் க்யூட் க்ளிக்ஸ்
இந்த செய்தி ஹிந்தி திரையுலகில் தீயாய் பரவி வருகிறது. விஜய் -வர்மா தமன்னா இணைந்து நடித்த முதல் படம் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com