
நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் படங்கள் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதையடுத்து தனுஷ் உடன் இணைந்து ‘3’படத்தில் நடித்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஸ்ருதி ஹாசன் நடித்து வந்தார்.
நடிகை மட்டுமில்லாமல் ஸ்ருதி ஹாசன் சிறந்த பாடகியும் கூட.தமிழில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். தற்போது கே.ஜி.எஃப் இயக்குனர் இயக்கிவுள்ள சலார் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தான் ‘தி ஐ’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்திருப்பதாக பதிவிட்டுள்ளார். அதில் ‘சில நேரங்களில் நீங்கள் மேஜிக்கலான, உணர்ச்சிகரமான மற்றும் உண்மையுள்ள ஏதோவொன்றின் ஒரு பகுதியாக இருப்பீர்கள்.இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த திரைப்படம்.நீங்கள் அனைவரும் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது’.
இந்த பதிவும் உதவலாம் : தலைவர் 170’ படத்தில் யார் யார் நடிக்கிறாங்க தெரியுமா? முழு விவரம் இதோ..

மேலும் இந்த திரைப்படம் கிரேக்க சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லண்டன் திரைப்பட விழாவில் திரையிரப்பட்டு உள்ளது என பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் தெரிவித்திருக்கிறார்.இந்த திரைப்படத்தை கிரீஸில் உள்ள கோர்ஃபு என்ற தீவில் படமாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com