லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான ‘அன்னபூரணி' டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். டிசம்பர் எப்பொழுதும் திருவிழா காலம் என்பதால் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. அந்த வகையில் இந்தப் படத்தின் நல்ல கதையம்சம் குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.’அன்னபூரணி’ படம் சரியான திட்டமிடலோடு சரியான நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த பதிவும் உதவலாம் : பிரம்மாண்டமாக நடைப்பெறவிருக்கும் ‘லியோ’ படத்தின் வெற்றி விழா!
அன்னப்பூரணி படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது. சமீபத்தின் அன்னபூரணி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வரவேற்பை பெற்றது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com