இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இந்த படம் லோகேஷின் LCU-வில் இடம்பெற்றிருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றது. படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. மேலும் படத்தின் முதல் வாரத்திலேயே ரூ,461 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது.
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை நடத்த காவல்துறை வழங்காததால் நிகழ்ச்சி நடைப்பெறாமல் போனது.இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.இந்நிலையில் படத்தின் வெற்றியை பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் கொண்டாட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதில் நடிகர் விஜய்யும் கலந்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் அவரின் ‘குட்டிக்கதையை’ கேட்க ஆரவாரத்தில் இருக்கின்றனர்.
இந்த வெற்றி விழாவிற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி பெரியமேடு காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் லலித் குமார் மனு கொடுத்திருந்தார். இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு பல்வேறு நிபந்தனையோடு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த பதிவும் உதவலாம் : சூப்பர் ஹாட்டான லுக்கில் நடிகை லாஸ்லியா! வைரல் படங்கள்..
மேலும் விழாவில் கலந்துக்கொள்ள ரசிகர்களிடம் பாஸ் கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நடைப்பெறவுள்ளது. இந்த விழா நவம்பர் 1 ஆம் தேதி நடைப்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com