நடிகை குஷ்பு 80, 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.ரஜினி, கமல் என தமிழில் டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிகை மட்டுமில்லாமல் அரசியல் பிரமுகராகவும் இருந்து வருகிறார்.குஷ்பு 2000 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர்.சி யை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். குஷ்பு இன்ஸ்டாகிராமில் சூப்பர் ஆக்டிவாக இருப்பார்.வெக்கேஷன் செல்லும் புகைப்படங்கள் , பியூட்டி டிப்ஸ் போன்றவற்றை பகிர்வார். நடிகை குஷ்பு சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஃபிட்டானது இணையத்தில் பேசும் பொருளாக மாறியது.
நடிகை குஷ்பு ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்திருந்தார். ஆனால் படத்தின் நீளத்தை கருத்தில் கொண்டு குஷ்பு இடம்பெற்ற காட்சிகள் நீக்கப்பட்டதாம். குஷ்பு பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார்.
நடிகை குஷ்புவிற்கு ட்ரெடிஷ்னலாக புடவை கட்டிக்கொள்ளவும் பிடிக்கும், மாடர்ன் உடைகளை அணிவதும் பிடிக்கும். இந்நிலையில் நடிகை குஷ்பு ஷார்ட் ஹேரில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் கேப்ஷனாக ‘மாற்றம் தவிர்க்க முடியாதது மற்றும் நிலையானது’ என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உண்மையிலேயே ஹேர் கட் செய்துவிட்டீர்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த பதிவும் உதவலாம் : தாறுமாறு கவர்ச்சியில் நடிகை ஷாலினி பாண்டே! லேட்டஸ்ட் போட்டொ ஷூட்..
நடிகை குஷ்பு திரைப்படத்திற்காக விக் வைத்திருக்கலாம் என கூறப்படுக்கிறது. குஷ்புவின் இந்த நியூ லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com