நடிகை இவானா இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தில் வேற லெவல் பிரபலமானார். இதில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.
ஹரிஷ் கல்யாண் - இவானா நடித்த ‘LGM' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தெலுங்கில் செல்ஃபிஷ் என்ற படம் மூலம் இவானா அறிமுகமாகவுள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழில் கல்வன் மற்றும் காம்ப்ளெக்ஸ் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். நடிகை இவானா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மற்றும் போட்டோ ஷூட் படங்களை பதிவிடுவார்.
இந்த பதிவும் உதவலாம் : மாடர்ன் லுக்கில் அசத்தும் ஷிவானி நாராயணன்!
புடவையில் ரசிக்க வைக்கிறார்..
நடிகை இவானா இந்த புகைப்படத்தில் ஜொலிக்கும் ப்ளூ கலர் புடவையை கட்டியிருக்கிறார். புடவைக்கு மேட்சாக காதில் தோடு அணிந்துள்ளார். ஹேர் ஸ்டைலை பொறுத்தவரை ஃப்ரீ ஹேர் விட்டுள்ளார்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com