தமிழகத்தில் முன்பு எல்லாம் திருமணம் என்றால் சம்பங்கி பூ, கோழிக்கொண்டை பூ, மற்றும் ரோஜா பூக்களை கொண்டு திருமணத்திற்கு மாலை தயாரிப்பார்கள். ஆனால் இன்றைய காலத்தில் திருமணத்தில் மாலைக்கொன்று பட்ஜெட் ஒதுக்கி திருமண மாலைகள் பல விதமாக வடிவமைக்கப்படுகிறது. பூக்கள் முதல் செயற்கை மலர்கள் வரை பல்வேறு வண்ணங்கள் மற்றும் சேர்க்கைகளில் திருமண மாலைகள் வந்துவிட்டது. இவற்றில் திருமண தம்பதிகள் அதிகமாக விரும்பும் சில அழகான மற்றும் சிறந்த திருமண மாலை வடிவமைப்புகளின் பட்டியலை நாங்கள் உங்களுக்காக தொகுத்துள்ளோம். இவற்றில் உங்களுக்கு பிடித்த வடிவமைப்பு மாலைகளை உங்கள் திருமணத்திற்கும் தேர்வு செய்யலாம்.
மேலும் படிக்க: கோடையில் வெளியே செல்லும் பெண்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க உதவும் வெள்ளை நிற சுடிதார் வகைகள்
திருமணத்திற்கு ரோஜா மலர் மாலை
சிவப்பு நிற ரோஜாக்கள் மற்றும் வெள்ளை ரோஜாக்களை ஒன்றின் மேல் ஒன்றாக அலங்கரித்து உருவாக்கப்படும் இந்த மாலை பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொடுக்கும். இந்த மாலை இரவு நேர வரவேற்புக்குப் பயன்படுத்துவதன் மூலம் நேர்த்தியான உணர்வும், விசித்திரமான தொடுதலும் அதை இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்றுகிறது. அதேபோல் உங்கள் உடையின் அடிப்படையில் ரோஜாக்களின் வண்ணங்களை மாற்றி வடிவமைத்து பயன்படுத்தலாம்.
இந்த அழகிய மாலை வடிவமைப்பு, பார்க்கவே வண்ணமயமாக இருக்கும். புதிய தாமரை எடுத்து, அதன் இதழ்களை கோர்த்து செய்யும் வேலைப்படுகள் கொண்ட மாலையாகும். அதேபோல் மொட்டு மல்லி கோர்த்தும் இந்த மாலை நேர்த்தியாக வடிவமைக்கப்படுகிறது. தாமரை பூக்களுக்கு இடையே மல்லியுடன், ரோஜா இதழ்களைச் சேர்த்து அழகான மாலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த மாலை எடுத்து மணமக்கள் அணியும் போது பேரழகின் வடிவமாகத் தெரிவார்கள்.
இந்த மாலை ரோஜா இதழ்களை, மல்லியுடன் கோர்த்து உருவாக்கப்படும் அழகிய சிவப்பு நிற மாலையாகும். இதன் இடையே தாமரைப் பூக்களைக் கொண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மணமக்களுக்கு இந்த மாலை சிறந்த தேர்வாக இருக்கும், மேலும் உங்கள் உடைகளுக்கு பொருந்தும் விதமாக மாலையில் ரோஜா இதழ்களை மாற்றி அமைத்து வடிவமைக்கலாம்.
முழுமையான வெள்ளை ஜிப்சி பூக்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மாலை. மணமகனுக்கும் மணமகனுக்கும் அழகாகத் தோற்றத்தையும், கம்பீரமான மற்றும் அதிநவீன மாலையை விரும்பினால் ஜிப்சி மாலை சரியான தேர்வாக இருக்கும். மாலையில் சிறிய சிறிய பச்சை நிற சேர்க்கைகளுடன் தோன்றும் இந்த பூ மாலை புதுவிதமான அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.
மேலும் படிக்க: பாரம்பரிய பட்டு புடவைகளை அணிந்து தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com