குழந்தை என்பது ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் ஓர் வரம். அதை முறையாகப் பராமரிப்பது என்பது கட்டாயம் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் இருக்கும் பொறுப்புள்ள பணி என்பது நிசர்தன உண்மை. அதே நேரம் பணிக்குச் செல்லும் பெண்களாக இருந்தால், குழந்தைப் பிறந்த 9 மாத காலங்களுக்குப் பிறகு பணிக்குச் செல்வதில் பல இக்கட்டான சூழல்களைச் சந்திப்பார்கள். இந்த சூழலில் பல பெண்கள் தங்களது பணியை விடும் சூழலுக்கும் தள்ளப்படுவார்கள். இவற்றை எப்படி சமாளிப்பது? பணிக்குச் சென்றாலும் கைக்குழந்தையும் பணியையும் எப்படி நிர்வகிப்பது என்பது குறித்த தகவல்கள் இங்கே.
மேலும் படிக்க: பெண் குழந்தைகளை இப்படி வளர்த்துப்பாருங்கள். நிச்சயம் தைரியமாக இருப்பார்கள்!
மேலும் படிக்க: உங்களது குழந்தைகளுக்கு சிறந்த அம்மாவாக மாற வேண்டுமா? இதை பாலோ பண்ணுங்க!
ஒரு வயது வரை பணிக்குச் சென்றாலும் கட்டாயம் குழந்தைகளுக்குப் பால் கொடுக்க வேண்டும். பணிக்குச் செல்லும் முன்னதாக தாய்ப்பாலை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். குளிர்சாதன பெட்டி இல்லாமல் அறையில் வைக்கிறீர்கள் என்றால் 4 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். அதுவே குளிர்சாதன பெட்டியில் இருந்தால் 8 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். இதுபோன்ற முறைகளில் தாய்ப்பாலை சேமித்து வைக்கும் போது குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்கிறார்கள் என்ற மனநிலை ஏற்படும். இதனால் பணியிடத்தில் மன அழுத்தம் இன்றி பணியாற்ற முடியும்.
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com