மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு; ஒரு படத்திற்கு ரூ.15 கோடி ?

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி ஜனவரி 16ஆம் தேதி 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருடைய சொத்து மதிப்பு, ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம், வாழ்க்கை முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
image
image

தென்மேற்கு பருவக் காற்றில் ஆரம்பித்து பெருமாள் வாத்தியார் வரை திரைத்துறையில் மகாராஜாவாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வித்தியாசமான கதைகளங்களை தேர்வு செய்து நடிக்கும் கலைஞர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். ஹீரோ, வில்லன், துணை நடிகர், மூன்றாம் பாலினத்தவராக திரையில் தோன்றி ரசிகர்களுக்கு விருந்து படைக்க கூடியவர். கடந்த 10 வருடங்களில் விஜய் சேதுபதி இல்லாத தமிழ் சினிமாவே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு குறுகிய காலக்கட்டத்தில் 50க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி திரையுலகிலும் விஜய் சேதுபதி தடம் பதித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு, ஒரு படத்திற்கான ஊதியம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

நடிகர் விஜய் சேதுபதியின் நிகர மதிப்பு

திரைத்துரையில் எப்போதும் டஜன் படங்களை வசம் வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 140 கோடி ரூபாய் ஆகும். விக்ரம் படத்தை தொடர்ந்து விடுதலை, ஜவான், மெரி கிறிஸ்துமஸ், விடுதலை 2 படங்களில் தனது சம்பளத்தை படிப்படியாக விஜய் சேதுபதி உயர்த்தியுள்ளார்.

ஜவான் படத்திற்கு விஜய் சேதுபதியின் சம்பளம்

ஒரு படத்திற்கு விஜய் சேதுபதி 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அதே போல விளம்பரங்களில் நடிக்க தலா 50 லட்சம் ரூபாய் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜவான் படத்தில் வில்லனாக நடித்ததற்கு விஜய் சேதுபதி 21 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். மகாராஜா, விடுதலை 2 படங்கள் ஈட்டிய வருவாய் காரணமாக விஜய் சேதுபதி தனது சம்பளத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம்

2014ல் விஜய் சேதுபதி சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தை தயாரித்திருந்தார். விமர்சகர்கள் இந்த படத்தை பெரிதும் பாராட்டினர். அதற்கு பிறகு லெனின் பாரதியின் அற்புத படைப்பான மேற்கு தொடர்ச்சி மலை படத்தை தயாரித்திருந்தார்.

விஜய் சேதுபதியின் ஆடம்பர வாழ்க்கை

சென்னையில் விஜய் சேதுபதிக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர பங்களா உள்ளது. விஜய் சேதுபதி ரியல் எஸ்டேட் தொழிலில் அதிகளவில் முதலீடு செய்துள்ளார். கீழ்ப்பாக்கம், சென்னை, எண்ணூரில் விஜய் சேதுபதிக்கு சொந்தமாக வீட்டுமனைகள் உள்ளன.

விஜய் சேதுபதியிடம் கார்கள்

விஜய் சேதுபதிக்கு சொந்தமாக 4 கார்கள் இருக்கின்றன. ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிஎம்டபிள்யூ சீரிஸ் 7 காரை வசம் வைத்துள்ளார். அதே போல 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான மினி கூப்பர், இன்னோவா, டொயோட்டா கார்களும் விஜய் சேதுபதிக்கு சொந்தம்.

மேலும் படிங்கநடிகர் விஜய்யின் அசர வைக்கும் சொத்து மதிப்பு; ஒரு படத்திற்கு இத்தனை கோடிகளா

பிக்பாஸ் தமிழ் 8வது சீசன் முடிந்த பிறகு படங்களில் முழு ஈடுபாடுடன் நடிக்க உள்ளார். இந்த பதிவில் இடம்பெற்ற விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு தகவல்கள் The financial express தளத்தில் கிடைக்கப்பெற்றவை.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP