
விஜய்யை வைத்து இயக்கினாலே படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ கோடிக்கணக்கில் வசூல் ஈட்டிவிடலாம் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் உண்டு. தமிழகத்தை கடந்து கேரளா, கர்நாடகா, வெளிநாடுகளில் ரஜினிக்கு அடுத்தப்படியாக மார்க்கெட் உண்டு. திரையுலக பயணத்தின் இறுதிக்கட்டத்தில் விஜய் இருந்தாலும் அவருடைய படங்களின் வியாபாரம் விரிவடைந்துள்ளது. பைரவா படத்திற்கு பிறகு பீஸ்ட் படத்தை தவிர்த்து விஜய்யின் பெரும்பாலான படங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேலாக வசூலித்துள்ளன. லியோ படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. சமீபத்தில் வெளியான கோட் படமும் இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் விஜய்யின் அரசியல் என்ட்ரி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய்க்கு ஏன் அரசியல் பயணம் என பேசப்படுகிறது. இதற்கு தவெக மாநாட்டில் மக்கள் நலனுக்காக அரசியல் களத்தில் பயணிக்க முடிவெடுத்து எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு வந்ததாக விஜய் தெரிவித்தார். ஒரு படத்திற்கு விஜய் அப்படியென்ன ஊதியம் வாங்குகிறார் என்ற கேள்வியும் எழுகிறது. எனவே விஜய் ஒரு படத்திற்கு வாங்கும் ஊதியம், சொத்து மதிப்பு, நிகர மதிப்பு, சொகுசு கார் விவரங்கள் ரசிகர் விருப்பத்தின்படி இங்கு பகிரப்பட்டுள்ளது.

விஜய்யின் சொத்து மதிப்பு 600 கோடி ரூபாய்க்கும் மேலாக இருக்கும் என கூறப்படுகிறது. தென் இந்திய சினிமாவில் பணக்கார நடிகர்களில் விஜய்யும் ஒருவர். மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, லியோ, கோட் என ஒவ்வொரு படத்திற்கும் விஜய்யின் ஊதியம் உயர்ந்துள்ளது.
முன்னதாக விஜய் சில தங்க நகை, செல்போன் நெட்வொர்க் விளம்பரங்களில் நடித்துள்ளார். இதற்கு ஒப்பந்த அடிப்படையில் குறிப்பிட்ட தொகையை பெற்றுள்ளார்.
கோட் படத்தை இயக்கிய தயாரிப்பாளர் ஒரு நேர்காணலில் படத்தின் மொத்த தயாரிப்பு செலவு 400 கோடி ரூபாய்க்கு மேல் என தெரிவித்திருந்தார். அதன்படி பார்க்கையில் விஜய்க்கு மட்டும் 200 கோடி ரூபாயாக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாலிவுட்டின் கான் நடிகர்களையே மிஞ்சி இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
மேலும் படிங்க "போருக்கு போன சின்ன பையன்" தவெக மாநாட்டில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி
முன்னதாக ஒரு படத்திற்கு 100 முதல் 110 கோடி ரூபாய் வரை வாங்கிய விஜய் தற்போது தளபதி 69 படத்திற்காக 250 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
நடிகர் விஜய்யிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், பி.எம்.டபிள்.யூ எக்ஸ் 5, ஆடி ஏ8, ஃபோர்ட் முஸ்டாங் ஆகிய சொகுசு கார்கள் உள்ளன. விஜய் கடந்த 2023-2024ஆம் நிதியாண்டிற்கு 80 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com