லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’படத்தில் விஜய் நடிக்கயிருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் வெளியாகி வேற லெவல் வரவேற்பை பெற்றது. இதனால் வெங்கட் பிரபுவின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
தளபதி 68 படத்தின் பூஜை விஜயதசமி நாளில் நடைப்பெற்றது. படத்தின் பூஜை வீடியோவை படக்குழு தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டது. இந்த படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், யோகி பாபு, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், பிரேம்ஜி, வைபவ் என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இந்த பதிவும் உதவலாம் : இத்தாலியில் நடைப்பெற்ற தெலுங்கு நடிகர் வருண் தேஜ் - லாவண்யாவின் பிரம்மாண்ட திருமணம்!
இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைப்பெற்று வருகிறது. இதில் கலந்துக்கொள்ள படக்குழு அக்டோபர் 31 ஆம் தேதி தாய்லாந்த் நாட்டிற்கு புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா நடந்து முடிந்ததை அடுத்த நடிகர் விஜய் இன்று காலை தாய்லாந்து நாட்டிற்கு தனியாக புறப்பட்டு சென்றிருக்கிறார். நடிகர் விஜய் விமான நிலையத்தில் எண்ட்ரி ஆகும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation