இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது நவராத்திரி நாட்கள். அன்னை பராசக்தி ஆனவள் தொடர்ந்து ஒன்பது நாட்கள் அசுரரர்களுடன் போரிட்ட நாட்களைத் தான் நவராத்திரி நாளாக இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். 10 வது நாள் அதாவது பராசக்தி ஆனவள் மூன்று சக்திகளாக இணைந்து மகிஷசுாரனை போரிட்டு வெற்றி பெற்ற நாளை விஜயதசமியாக கொண்டாடுகிறோம். வாழ்க்கையில் வந்த கஷ்டங்களையெல்லாம் சமாளித்து வெற்றி பெற்ற இந்த நாளில் எதைத் தொடங்கினாலும் சுபமாக அமையும் என்ற நம்பிக்கையைத் தொன்று தொட்டு பின்பற்றி வருகின்றனர். இந்தாண்டிற்கான விஜயதசமி நாள் எப்போது? குறிப்பாக இந்த நாளில் மட்டும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கிறார்கள்? என்பது குறித்த தகவல்களை இங்கே அறிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: Newborn baby's first winter:குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளைப் பராமரிக்கும் முறை இது தான்!
மகிஷாசூரனை அழித்து வெற்றிக் கண்டதைக் கொண்டாடும் விஜயதசமி திருநாள் இந்தாண்டு அக்டோார் 2 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. வாழ்க்கையில் எவ்வளவு தீமைகள் மற்றும் தோல்விகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் மறந்து நிம்மதியையும், சந்தோஷத்தையும், செழிப்பை மட்டும் தரக்கூடியதாக அமைகிறது விஜயதசமி. இந்த நாளில் எதைத் தொடங்கினாலும் வெற்றிப் பெறுவோம் என்ற நம்பிக்கையால் இன்றளவும் அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றாக உள்ளது.
நவராத்திரியின் இறுதி நாளான விஜயதசமியில் புதிதாகத் தொட்டது அனைத்தும் சொழிக்கும் என்பதால் குழந்தைகளின் முதற்கல்வியை இந்த நாளில் ஆரம்பிக்கிறார்கள். இந்த நாளில் குழந்தைகள் தங்களது கல்வியைத் தொடங்கினால் வாழ்க்கையில் திறந்த அறிவுக்கூர்மையுடன் திகழ்வதோடு வெற்றிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் கொண்டுள்ளனர். இதனால் தான் ஆண்டின் முதல் நாளில் குழந்தைகளைச் சேர்க்காமல் விஜயதசமி நாள் வரை பெற்றோர்கள் காத்திருக்கும் பழக்கம் பாரம்பரியமாகத் தொடர்கிறது. இதற்காகவே இன்றைக்கு ஒவ்வொரு பள்ளிகளிலும் விஜயதசமிக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதிலும் பராம்பரிய முறைப்படி ஒரு பெரிய தாம்பழத்தில் அரிசி அலலது நெல்லைப் பரப்பி, தமிழின் முதல் எழுத்தான அ என்பதை எழுதி வைப்பார்கள். இதை விஜயதசமி வித்யாரம்பம் என்றழைப்பார்கள்.
மேலும் படிக்க: இந்து மதத்தின்படி மிகக் கொடிய பாவம்; தப்பித் தவறி கூட பண்ணாதீங்க
குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாவிட்டாலும் பெற்றோர்களில் சிலர் தங்களுடைய குழந்தைகள் எழுதும் முதல் எழுத்தை விஜயதசமி நாளில் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வீடுகளிலேயே வித்யாரம்பம் செய்து வருகின்றனர். பணம், பொருள் போனற செல்வதை விட குழந்தைகளுக்கு கல்வி தான் சிறந்த செல்வமாக அமையும் என்பதால் இந்த விஜயதசமி நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
விஜயதசமிக்கு முந்தைய நாளான ஆயுத பூஜை நாளில் புத்தகங்களை பூஜை அறையில் வைத்து வழிபடுவது வழக்கம். இப்படி வழிபட்ட புத்தகங்களை பெரியவர்கள் கையில் எடுத்துக் கொடுக்கச் சொல்லி சிறிது நேரமாவது விஜயதசமி நாளில் படிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது அறிவுத்திறன் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com