தென்னிந்திய திரைப்படத்துறையில் தமிழ் திரையுலகம் சில ஆண்டுகளுக்கு முன்பு கொடி கட்டி பறந்தது. ஆனால் தற்போது மலையாள சினிமா லோ பட்ஜெட்டில் பீல் குட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து வருகிறது. குறிப்பாக 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை தமிழ் திரையுலகில் வெளியான திரைப்படங்கள் எதுவும் அந்த அளவிற்கு மக்களிடம் வரவேற்புகளை பெறவில்லை.
ஆனால், இந்த 2024ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித்குமார், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாக உள்ளது. இது போன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஒரே ஆண்டில் வெளியாகிய சம்பவம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிறது. 2024ம் ஆண்டின் ஜூன் மாதத்திலிருந்து டிசம்பர் வரை தமிழ் சினிமாவில் எந்தெந்த நட்சத்திரங்களின் திரைப்படம் எந்தெந்த தேதிகளில், மாதங்களில் வெளியாகிறது என்ற தகவலை இதில் பார்க்கலாம்.
2024ம் ஆண்டு வெளியாக உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள்
இந்தியன் 2
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 வருடங்களுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வெளியிட தயாராக உள்ளது. இந்தியன் -2 படத்தில் கமலஹாசன், எஸ்.ஜே சூர்யா, காஜல் அகர்வால், சித்தார்த் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் மாதம் 13ஆம் தேதி வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கலாம்.
சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் வேட்டையன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாக தகவல்கள் தமிழ் சினிமா வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தல-யின் விடாமுயற்சி
நடிகர் அஜித்குமாரின் 62-வது திரைப்படமான விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித், த்ரிஷா, பிரியா பவானி சங்கர், அர்ஜுன், ரெஜினா கெசாண்ட்ரா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். தல ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தளபதி விஜயின் கோட்
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படம் 2024-ஆம் ஆண்டின் பண்டிகையை டார்கெட் செய்து வெளியாக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த், இயக்குனர் பிரபுதேவா, பைக் மோகன், ஜெயராம், சினேகா பிரசன்னா, லைலா உள்ளிட்ட 90ஸ் கிட்ஸ்-களுக்கு பிடித்த நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதியின் கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கங்குவா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. மிகப்பெரிய பொருட் செலவில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் கங்குவா திரைப்படம். வரலாற்று பின்னணியை மையமாக கொண்டு உருவாகி வரும் கங்குவா உலக சினிமா தரத்திற்கு அளவிற்கு சர்வதேச அளவில் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இந்த கங்குவார திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தங்கலான்
சியான் விக்ரமின் தங்கலான் திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. கோலார் தங்க வயல் கதை பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை இயக்குனர் ரஞ்சித் இயக்கி வருகிறார். ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
மேலும் படிக்க:இந்த வார புது ரிலீஸ் படங்கள்.. சைரன் முதல் ஆர்டிகல் 370 வரை!
2024ல் எதிர்பார்க்கப்படும் மற்ற திரைப்படங்கள்
ஏப்ரல் 26 ஆம் தேதி இயக்குனர் ஹரி இயக்த்தில் நடிகர் விஷால் நடித்துள்ள ரத்தினம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அந்த படத்தோடு சேர்த்து இயக்குனர் சுந்தர்சி-யின் அரண்மனை-4 திரைப்படமும் வெளியாக உள்ளது. அதேபோல் இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் வணங்கான. நடிகர் அல்லுஅர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்ற புஷ்பா படத்தின் தொடர்ச்சியான புஷ்பா-2 திரைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் வெளியாக உள்ளது. நடிகர் பிரபாஸ் நடித்த கல்கி திரைப்படம். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation