பெண்களே அதிகரித்த எடையை சட்டென்று குறைக்கணுமா? இதை மட்டும் குடிங்க

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், முறையற்ற தூக்கம் போன்ற பல காரணங்களால் இன்றைக்கு பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் அவதிப்பட்டுவருகின்றனர்.
image

எவ்வித பக்க விளைவுகள் இல்லாமல் உடல் எடையைக் குறைக்கிறோம் என்ற விளம்பரங்களை சமீப காலங்களாக அடிக்கடி தொலைக்காட்சிகளில் பார்த்து வருகிறோம். இது போன்ற விளம்பரங்களை நம்புவதை விட்டு விட்டு, ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால் கீழ்வரக்கூடிய பானங்களைக் கட்டாயம் உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்களின் உடல் எடையைக் குறைக்கும் பானங்கள்:


கிரீன் டீ:

உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு சிறந்த பானமாக உள்ளது கிரீன் டீ. காலையில் வெறும் வயிற்றில் சூடான தண்ணீரில் கிரீன் டீ யின் இலைகளை போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகளைக் கரைக்கிறது. வளர்சிதை மாற்றத்தை சீராக்கி உடலின் செரிமான சக்தியையும் சீராக்குகிறது.

இஞ்சி மற்றும் எலுமிச்சை பானம்:

பெண்கள் தங்களுடைய உடல் அமைப்பை இஞ்சி போன்று அதாவது இஞ்சி இடுப்பழகு போன்று கொண்டு வர வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதிகமாக ஸ்நாக்ஸ்கள் சாப்பிடுவது, நேரம் தவறி சாப்பிடுவது போன்ற பல்வேறு காரணங்களால் உடல் தொப்பையோடும் குண்டாகவும் தெரிவார்கள்.

இப்பிரச்சனைக்குத் தீர்வு காண இஞ்சி மற்றும் எலுமிச்சை கலந்த பானம் சிறந்த தேர்வு. இஞ்சியில் உள்ள ஆன்டி ஆக்ஸிட்டுகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பசியைக் கட்டுப்படுத்துகிறது.

கருப்பட்டி காபி:

முன்பெல்லாம் பெரும்பாலான வீடுகளில் கருப்பட்டி காபி நிச்சயம் காலை நேரத்திற்கான சூடான பானமாக இருக்கும். ஆம் அந்தளவிற்கு கருப்பட்டியில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. எவ்வித பக்க விளைவுகள் இல்லாமல் உடல் எடையைக் குறைக்கிறது. குறிப்பாக கருப்பட்டியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மெட்டபாலிசத்தை அதிகரித்து பசியைக் கட்டுப்படுத்துகிறது.

வெந்தய தண்ணீர்:

உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் பெண்கள் கட்டாயம் வெந்தய தண்ணீரைப் பருகலாம். தினமும் இரவு ஒரு டம்ளர் தண்ணீரில் 4 டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து அதன் தண்ணீரைக் குடிக்க வேண்டும். முடிந்தால் வெந்தயத்தையும் சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள கொலஸ்டிராலைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

இலவங்கப்பட்டை மற்றும் தேன்:

பெண்கள் எவ்வித பக்க விளைவுகள் இல்லாமல் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால் வாரத்திற்கு ஒருமுறையாவது இலவங்கப்பட்டை தூள் மற்றும் தேன் கலந்த தண்ணீரைக் குடிக்க வேண்டும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உடலில் அதிகப்படியான கொழுப்புகளைச் சேர்வதைத் தடுக்கிறது.

மேலும் படிக்க:உடலில் இந்த பகுதிகளில் ஏற்படும் வலி மற்றும் சில அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்

இதுபோன்ற பானங்களைத் தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக பருக வேண்டும். ஆனாலும் முறையான தூக்கம், ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

credit - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP