
ஒவ்வொரு வாரமும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் திரையரங்குகளில் புது திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது போல தொடர்ந்து ஓடிடியில் ஏராளமான திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக ஓடிடியில் வரவேற்பு கிடைக்கிறது. இந்த வாரம் ஆஹா, நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார், ஜியோ சினிமா போன்ற ஓடிடி தளங்களில் ரிலீசாகும் படங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படமாக உருவாகியுள்ள திரைப்படம் கல்கி. இந்த படத்தில் நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜூன் 27ஆம் தேதி உலகளவில் வெளியாகி வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கல்கி வெளியாகி 7 முதல் 8 வாரங்களுக்குப் பிறகு அதாவது ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழியில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ராயன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன் சந்தீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி வெளியாகி உலக அளவில் 126 கோடி வசூல் செய்துள்ள ராயன் திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக உள்ளது.

நடிகர் நகுல் நடிப்பில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான தமிழ் திரைப்படம் வாஸ்கோடகாமா. ஆர்.ஜி கிருஷ்ணன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் நகுல், கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். என்.வி அருண் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com