
டொவினோ தாமஸ் நடிப்பில் இந்த ஆண்டு ’2018’என்ற படம் வெளியானது. இந்த படம் ஒரு சர்வைவல் ட்ராமா திரைப்படமாகும். 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தை ஜூட் ஆந்தனி ஜோசப் இயக்கி இருக்கிறார்.படத்தில் தன்வி ராம், கலையரசன், அபர்ணா பாலமுரளி, வினித் ஸ்ரீனிவாசன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்த ஆண்டு மே 5 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான 2018 படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதுவரை கேரளாவில் எந்த படமும் வசூலிக்காத ரூ.200 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் மலையாளத்தில் தயாரான இந்த படம் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வாகி உள்ளது.உலகளவில் சிறந்த விளங்கும் திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் இந்திய சார்பில் அனுப்பப்படும் படத்தை தேர்வு செய்ய கிரிஷ் கசரவல்லி தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த பதிவும் உதவலாம் : என் உடலை பற்றி கமெண்ட் செய்யாதீங்க.. பாடி ஷேமிங் பற்றி ஓப்பனாக பேசிய அம்மு அபிராமி..

இதில் தமிழ் மொழியில் இருந்து விடுதலை, வாத்தி, மாமன்னன், ஆகஸ்டு 16 1947 ஆகிய 4 படங்கள் அனுப்பப்பட்டன. இதேபோல ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி மொழி படங்கள என மொத்தம் 16 படங்கள் அனுப்பப்பட்டன. இதில் மலையாள படம் ’2018’ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வாகியிருப்பதை மலையாள சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com