ammu abhirami about body shaming insta story

Ammu Abhirami : என் உடலை பற்றி கமெண்ட் செய்யாதீங்க.. பாடி ஷேமிங் பற்றி ஓப்பனாக பேசிய அம்மு அபிராமி..

நடிகை அம்மு அபிராமி ஒருவரின் உடல் அமைப்பை பற்றி யாருமே பேசக்கூடாது என தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார். <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-09-27, 23:00 IST

நடிகை அம்மு அபிராமி ராட்சசன் படம் மூலம் பிரபலமானார். அதையடுத்து அசுரன் படத்திலும் நடித்திருந்தார்.டாப் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு 2வது ரன்னப் அப்பாக வெற்றி பெற்றார்.அம்மு அபிராமி குதூகலம், கனவு மெய்பட மற்றும் சில படங்களில் கமீட் ஆகி இருக்கிறார்.

 இந்நிலையில் நடிகை அம்மு அபிராமி இன்ஸ்டாகிராமில் பாடி ஷேமிங் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அம்மு அபிராமி பதிவிட்டது என்னவென்றால் ‘ஹார் டியர் இன்ஸ்டா நண்பர்களே.நான் ஒரு சென்சிடிவான டாப்பிக் குறித்து பேச விரும்புகிறேன். சமீப காலமாக நான் உடல் எடை அதிரித்துவிட்டேன்.அது எனக்கு தெரியும். அதற்காக வொர்க்கவுட்டும் செய்து வருகிறேன். இதை எனக்காகவும் என் சொந்த சந்தோஷத்திற்காகவும் மட்டும் செய்து வருகிறேன்’.

நான் பல ஆண்கள் என்னுடைய உடல் எடை அதிகரித்தது குறித்து கமெண்ட் செய்து வருவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். என் உடல் மாற்றம் குறித்து அவர்கள் சொல்லி தருவது வேடிக்கையாக இருக்கிறது. அவர்களுக்கு தேவையே இல்லாத விஷயத்திற்காக வாழ்க்கையின் நேரத்தை ஒதுக்கி கமெண்ட் செய்வதை ஆண்கள் சரி என்று நினைக்கின்றனர்.

 இந்த பதிவும் உதவலாம் : ரஜினிகாந்தை தொடர்ந்து இமயமலைக்கு சென்ற பிரபல நடிகை!

 

ammu abhirami on weight gain

உண்மையாகவே என் மீது அக்கறை கொண்டு யாராவது கமெண்ட் செய்திருந்தால் என்னை தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவர்களுக்கு நன்றி.ஆனால் சிலர் கமெண்ட் செய்யவேண்டும் என்பதற்காகவே செய்கின்றனர்.

எனக்கு 16 வயது இருக்கும் போது நான் சினிமாவில் நுழைந்தேன். அப்போது என் மார்பகங்களை பெரிதாக காட்ட பாடட்(padded) பிராக்களை போட சொன்னார்கள்.அதை நான் மறுத்துவிட்டேன்.எனக்கு 18 வயது இருக்கும் போது நான் குண்டாக இருக்கிறேன். டயட்டில் இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.அது எனது மனதை உடைத்தது. உருவக்கேலி, எனது உடலை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பவது, என்னை நானே வெறுத்துக்கொண்டு, இப்படியே வருடங்கள் ஓடியது. பெண்களாகிய நமக்கு ஒவ்வொரு நாளும் நாம் எப்படி இருக்கிறோம் என்பது பற்றிய விமர்சனங்களை பெற்று வருகிறோம்.

ammu abhirami latest post

ஒருவர் எப்படி பட்ட கஷ்டத்தை அனுபவிக்கிறார் என்பது நமக்கு எப்பவும் தெரியாது.எனவே தெரியாமல் செய்யும் அல்லது சொல்லும் சில விஷயங்கள் அவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.எனவே நீங்கள் பேசுவதற்கு முன்பு யோசியுங்கள். முக்கியமாக நீங்கள் ஒரு ஆன்லைன் புல்லியாக இருந்தால் உங்களுடையை வாழ்க்கையை வாழுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com