
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களை பார்க்க தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. காலை முதல் இரவு வரை விஜய் டிவியில் 10க்கும் மேற்பட்ட சீரியல்கள் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகின்றன. இதில் குறிப்பிட்ட சீரியல்கள் 1000 எபிசோடுகளை தாண்டி மக்களின் ஆதரவுடன் தொடர்ந்து ஒளிப்பரப்பாகி வருகின்றன. அந்த வரிசையில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, தமிழும் சரஸ்வதியும் போன்ற சீரியல்கள் மிகவும் முக்கியமானவை. அதே போல் இந்த ஆண்டு புதியதாக தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை, மகாநதி, ஆஹா கல்யாணம், பொன்னி போன்ற சீரியல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் ரசிகர்களின் அடுத்த மிகப் பெரிய எதிர்பார்ப்பான பிக் பாஸ் சீசன் 7 இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எல்லா வருடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும் நேரத்தில், விஜய் டிவியில் இரவில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் நேரம் மாற்றப்படும். ஆனால் இந்த முறை வழக்கத்தை விடவும் சீரியல்கள் அதிகளவில் ஒளிப்பரப்பாகி வருவதால் 3 முக்கிய சீரியல்களை முடிக்க முடிவு செய்யபபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மதிய நேரத்தில் ஒளிப்பரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. பல போராட்டங்களுக்கு பிறகு சூர்யாவும் வெண்ணிலாவும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு மேல் கதையை இழுக்க விரும்பாமால் காற்றுக்கென்ன வெலி சீரியலுக்கு கூடிய விரைவில் சேனல் நிர்வாகம் சுபம் போடவுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த லிஸ்டில் தென்றல் வந்து என்னை தொடும் அல்லது கண்ணே கலைமானே தொடர் இருப்பதாக தெரிகிறது. இந்த 2 தொடர்களில் ஒரு தொடர் முடிய இருப்பதாக கூறப்படுகிறது.
அதே போல் கடந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிய இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வர இருப்பதாக கூறப்படுகிறது. வேற நேரத்தில் ப்ரைம் டைமில் இந்த சீரியல் ஒளிப்பரப்பாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக மொத்தத்தில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் 3 சீரியல்கள் முடிக்க இருப்பதாக தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இதன் உண்மை நிலவரம் கூடிய விரைவில் தெரிந்து விடும்.
இதுப்போன்ற சினிமா பதிவுகளுக்கு மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com