
டெலிவிஷன் உலகில் தனக்கென தனி அடையாளத்தை பெற்றது விஜய் டிவி. இதில் ஒளிப்பரப்பாகும் தொடர்கள் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த தொடர்களாக உள்ளது. காலையில் தொடங்கி இரவு வரை கிட்டத்தட்ட 10க்கும் மேற்ப்ட்ட சிரியல்கள் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகின்றன. சீரியல்களில் மட்டுமில்லை அந்த தொடர்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. விஜய் டிவி சீரியல்களில் நடித்த பலரும் இன்றும் வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் காற்றுக்கென்ன வேல்கி தொடர் இளைஞர்களின் ஃபேவரெட் சீரியலாக உள்ளது.
இதில் சூர்யா, வெண்ணிலா ரோல்களில் நடிக்கும் சுவாமி நாதன், பிரியங்கா குமார் ஆகியோருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்தாண்டு நடைப்பெற்ற விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியிலும் இவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விஜய் டிவியின் சூப்பர் டூப்பர் சீரியலான காற்றுக்கென்ன வேலி கூடிய விரைவில் முடிவுக்கு வராவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கதைப்படி, வெண்ணிலாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்ககின்றன. இந்த விஷயம் சூர்யாவுக்கும் தெரிந்து விட்டது. இதை தடுத்து நிறுத்தி, வெண்ணிலாவுடன் சூர்யா சேர்வது போல கதை முடியும் என தெரிகிறது. சீரியல் முடியும் செய்தி இணையத்தில் பரவிய நிலையில் ரசிகர்கள் சீரியலை மிஸ் செய்யப்போவதாக கமெண்டில் கூறி வருகின்றனர்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com