குக் வித் கோமாளி ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கி கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் நிகழ்ச்சியில் பரபரப்பை அதிகரிக்க மூன்றாவது வாரத்தில் முதல் எலிமினேஷன் நடந்ததுள்ளது. இந்த வாரத்தில் கோமாளிகள் சவுண்ட் சவுந்தர்யா, ராமர் பங்கேற்கவில்லை. போன் செய்து போட்டியாளர்களுக்கும் கோமாளிகளுக்கும் பேரிங் செய்ததில் கஞ்சா கருப்பு - சரத், சுந்தரி அக்கா - பூவையார், ஷபானா - புகழ், பிரியா ராமன் - குரேஷி, நந்தகுமார் - டோலி, ராஜு - டைகர் தங்கதுரை, லட்சுமி ராமகிருஷ்ணன் - யோகி, உமர் லத்தீப் - சுனிதா, சவுந்தர்யா - சர்ஜுன், மதுமிதாவுடன் புதிய கோமாளி இணைக்கப்பட்டனர். கடந்த வாரங்களில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் டேஞ்சர் ஸோனில் விவசாயி நந்தகுமார், கஞ்சா கருப்பு, செளந்தர்யா சில்லுக்குரி இருந்தனர்.
இந்த வாரம் முதல் எலிமினேஷன் என நடுவர்கள் அறிவித்த நிலையில் 1 Vs 1 சேலஞ்ச் நடைபெற்றது. பிரியா ராமனும் - லட்சுமி ராமகிருஷ்ணன் மோதிக் கொண்டனர். போட்டியாளர்கள் சமைப்பதற்கு 90 நிமிடங்களுக்கும் இரண்டு பொருட்களும் வழங்கப்பட்டன. புள்ளிகள் அடிப்படையில் பிரியா ராமன், ராஜு ஜெயமோகன், கஞ்சா கருப்பு, ஷபானா வென்றனர். கடந்த இரண்டு வாரங்களாக பிரியா ராமன் தங்க தொப்பியை வென்று வசம் வைத்திருந்த நிலையில் இந்த வாரம் ராஜு ஜெயமோகன் பப்பாளி - சிக்கன் கவலையில் அருமையான சமையல் செய்து தங்க தொப்பியை வென்றார். ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலில் பிரியா ராமன் முதலிடத்திலும், லட்சுமி ராமகிருஷ்ணன் இரண்டாவது இடத்திலும் தொடர்ந்தனர்.
போட்டியாளர்கள் சமைத்ததை ருசித்த பிறகு மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் கெளஷிக், செஃப் தாமு வழங்கிய மதிப்பெண் அடிப்படையில் எலிமினேஷனுக்கு செளந்தர்யா சில்லுக்குரியும், விவசாயி நந்தகுமாரும் சென்றனர். இருவரில் ஒருவரை எலிமினேட் செய்ய திட்டமிட்டு மீண்டும் ஒருமுறை சமைக்கும் வாய்ப்பு தரப்பட்டது. காளானை வைத்து நந்தகுமார் காளான் ரோலும், சவுந்தர்யா சில்லுக்குரி சீஸ் காளான் போண்டா செய்திருந்தனர். இருவரின் சமையலும் நடுவர்களுக்கு திருப்தி அளிக்காத நிலையில் செளந்தர்யா சில்லுக்குரி குக் விக் கோமாளி ஆறாவது சீசனில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். வைல்டு கார்டு வாய்ப்பில் மீண்டும் செளந்தர்யா சில்லுக்குரி போட்டியிட வாய்ப்புள்ளது. அடுத்த வாரத்தில் மதிப்பெண் பட்டியல் மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கப்படும் என நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
என்னமா இப்படி பண்றிங்களே மா...😂
— Vijay Television (@vijaytelevision) May 25, 2025
Cooku with Comali Season 6 😃 இன்று இரவு 9.30 மணிக்கு மற்றும் நாளை இரவு 8.30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #GenGoldVsGenBold #CookuWithComaliSeason6 #CookuWithComali6 #CWC #VijayTelevision #VijayTV pic.twitter.com/3uAkBK8kVE
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com