
பிரின்ஸ் தோல்விக்கு பிறகு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த திரைப்படம் மாவீரன். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சரிதாவும் எண்ட்ரி கொடுத்தார். மண்டேலா படத்தின் இயக்குனர் மடோனா அஸ்வின் இந்த படத்தை இயக்கினார். கடந்த மாதம் வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. வாய்ஸ் ஓவர் கான்செப்டில் தமிழ் சினிமாஉக்கு புதிய திரைக்கதையை படைத்திருந்தார் இயக்குனர். இந்நிலையில் மாவீரன் திரைப்படம் இன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.
ராட்சனன் படத்திற்கு பிறகு சைக்கோ த்ரில்லர் பாணியில் மிரட்டியிருந்த படம் போர் தொழில். இதில் அசோச் செல்வன் ஹீரோவாக நடித்திருந்தார். அவருடன் முக்கிய ரோலில் சரத் குமாரும் நடித்தார். படத்தின் கதை ரசிகர்களை மிரள வைத்தது. தொடர்ந்து நடக்கும் பெண்களின் கொலை, அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என போர் தொழில் தியேட்டரில் ரசிகர்களை மிரட்டி எடுத்தது. இந்நிலையில் படத்தின் ஓடிடி அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். ஒருவழியாக சோனி லைவில் போர் தொழில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

சிபிராஜ் நடித்த மயோன் திரைப்படம் கடந்த வருடம் திரையரங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த மக்கள் இயக்குனர் மற்றும் நடிகர்களின் நடிப்பை பெரிதும் பாராட்டி இருந்தனர். இப்படி இருக்கையில் சுமார் 1 வருடத்திற்கு பிறகு மயோன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அமேசான் பிரைம் தளத்தில் மயோன் திரைப்படம் வெளியாகியுள்ளது. மிஸ் செய்து விடாதீர்கள். இந்த வாரம் பொழுதை கழிக்க இந்த திரைப்படம் மிகச் சிறந்த தேர்வு.
பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் ஹீரோவாக நடித்து இருந்தார். ராமாயண காலம் புராண திரைப்படமாக வெளிவந்த ஆதிபுருஷ் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. குறிப்பாக படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் ட்ரோல் செய்யப்பட்டன. இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com