
பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாவுக்கும் படையெடுக்கும் இந்த நேரத்தில் தொலைக்காட்சிகள் தங்கள் ரேட்டிங்கை தக்க வைப்பதற்காக பல யுக்திகளை கையாளும். காலையில் ஆன்மீக நிகழ்ச்சியில் தொடங்கி மாலையில் புத்தம் புதிய படங்கள் ஒளிபரப்பு வரை ஒவ்வொரு தொலைக்காட்சியும் போட்டி போட்டு ரேட்டிங் பெற முயற்சிப்பார்கள்.
இதில் குறிப்பாகப் பட்டிமன்றத்திற்கு அடுத்தபடியாக அனைவரும் புத்தம் புதிய படங்களின் அறிவிப்புக்காக காத்திருப்பர். பல வீடுகளில் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளிடம் என்ன புதிய படம் போடுறாங்க என ஆர்வமுடன் கேட்பதை பார்த்திருப்போம். அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் கொண்டாட்டத்திற்கு முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் படங்களின் விவரம் இங்கே…
பொங்கல் திருநாளில் விஜய் ரசிகர்களை கவர்ந்திடும் விதமாக சன் தொலைக்காட்சி மாலை 6.30 மணிக்குக் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகி 100 நாட்களைக் கூட நிறைவு செய்யாத சூப்பர் ஹிட் திரைப்படமான லியோவை ஒளிபரப்புகிறது. சண்டை காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தை மீண்டும் ஒருமுறை காண விஜய் ரசிகர்கள் ஆவலில் இருக்கின்றனர்.
முதல் நாள் ரேட்டிங்கை இரண்டாம் நாளிலும் தொடர்ந்திட மாட்டுப் பொங்கல் தினத்தன்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் X படம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு தொலைக்காட்சி ரேட்டிங்கிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் டிவியின் போட்டியாளரான விஜய் டிவி பொங்கலுக்கு முன்னதாகவே சில புதிய படங்களை ஒளிபரப்ப திட்டமிட்டு இருக்கிறது. அதாவது 14ஆம் தேதி அமிதேஷ், சரத் குமார் நடிப்பில் வெளியான பரம்பொருள் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. தைப் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கலுக்கு மாமன்னன், போர் தொழில், பிச்சைக்காரன் 2, குட் நைட் ஆகிய படங்களை ஒளிபரப்ப விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. மைனா, கும்கி படங்களைப் போல மேற்கண்ட படங்களை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என்பதே பலரது எண்ணம்.
மேலும் படிங்க கேப்டன் மில்லர் Vs அயலான் Vs குண்டூர் காரம்... பொங்கலுக்கு 8 படங்கள் ரிலீஸ்
ஜீ தமிழ் தொலைக்காட்சி பேன் இந்தியா படமாக அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படத்தை ஒளிபரப்புகிறது. மணி ஹெய்ஸ்ட், மெர்சல், ஆரம்பம் ஆகிய படங்களை நீங்கள் பார்த்திருந்தாலும் ஜவான் படத்தை ஒரு முறை பார்க்கலாம். ஷாருக்கானின் மாஸ் காட்சிகள் புதிதாக இருக்கும்.

திரையரங்குகளில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கதாநாயகன் விஷாலை விட எஸ்.ஜே.சூர்யா அதிக பாராட்டுக்களை பெற்றார். சில்க் ஸ்மிதா ரசிகர்கள் மறக்காமல் மார்க் ஆண்டனி படத்தை பார்க்கவும்.
ஹிப் ஹாப் ஆதியின் வீரன் திரைப்படம் ஜனவரி 16ஆம் தேதி 12.30 மணிக்கு ஒளிபரப்படுகிறது.
அருள்நிதி நடித்த கழுவேர்த்தி மூக்கன் பொங்கல் அன்று ஒளிபரப்பாகிறது. ஜெயம் ரவி நடித்த இறைவன் படம் சைக்கோ கில்லர் பற்றியது. 16ஆம் தேதி ஒளிபரப்பாகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com