ஒவ்வொரு வாரமும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் திரையரங்குகளில் புது திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது போல தொடர்ந்து ஓடிடியில் ஏராளமான திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக ஓடிடியில் வரவேற்பு கிடைக்கிறது. இந்த வாரம் நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார், அமேசான் ப்ரைம் வீடியோ, ஜியோ சினிமா போன்ற ஓடிடி தளங்களில் ரிலீசாகும் படங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி மணிகண்டன் நடிப்பில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி மக்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் குடும்பஸ்தன். ராஜேஸ்வர் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன், குரு சோமசுந்தரம், பிரசன்னா பாலச்சந்திரன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடன் தொல்லையால் வேலையை இழந்த ஒரு மிடில் கிளாஸ் இளைஞர் தன் குடும்பத்தாலும் இந்த சமூகத்தாலும் எந்த அளவிற்கு புறக்கணிக்கப்படுகிறார் என்பது இந்த திரைப்படத்தில் அழகாக காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த கடனை அடைக்க நடிகர் மணிகண்டன் எவ்வளவு போராடுகிறார் என்பது தான் திரைப்படத்தின் கதைகளம் ஆகும். அந்த வரிசையில் இந்த திரைப்படம் பிப்ரவரி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
2022 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஒரு தமிழ் கிரைம் திரில்லர் வெப் சீரிஸ் சுழல். இந்த சஸ்பென்ஸ் மிஸ்ட்ரி வெப் தொடர் ரசிகர்களின் எதிர்பாராத வரவேற்பை அடுத்து இந்த தொடரின் இரண்டாம் பாகம் சூழல் டு தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. புஷ்கர் காயத்ரி சேர்ந்து இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில் நடிகர் கதிர் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் சுழல் 2 வெப் சீரிஸ் பிப்ரவரி 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அமேசான் பிரைம் தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
மலையாள மொழியில் உருவாகியுள்ள ஒரு காமெடி வெப் சீரிஸ் லவ் அண்டர் கன்ஸ்ட்ரக்ஷன். புது வீடு கட்ட வேண்டும் என்று கனவோடு இருக்கும் ஒரு இளைஞர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல சிக்கல்கள் தான் இந்த தொடரின் கதைகளம். அந்த வரிசையில் லவ் அண்டர் கன்ஸ்ட்ரக்ஷன் வெப் சீரிஸ் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
தெலுங்கு இயக்குனர் அணில் ரவிபொடி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீசான திரைப்படம் சங்கராந்திக்கு வஸ்துன்னாம். சுமார் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மார்ச் 1ஆம் தேதி சனிக்கிழமை இந்த திரைப்படம் ஜீ 5 ஓடிடி தினத்தில் ரிலீஸ் ஆகிறது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com