ஒவ்வொரு வாரமும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் திரையரங்குகளில் புது திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது போல தொடர்ந்து ஓடிடியில் ஏராளமான திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக ஓடிடியில் வரவேற்பு கிடைக்கிறது. இந்த வாரம் ஆஹா, நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார், ஜியோ சினிமா போன்ற ஓடிடி தளங்களில் ரிலீசாகும் படங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
லால் சலாம்:
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் ரஜினியின் சினிமா கேரியரில் மிக மோசமான திரைப்படமாக அமைந்துள்ளது. சுமார் ஒன்பது வருட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தின் மூலம் இயக்குநராக ரீ- என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் ஹீரோவாக நடித்திருந்தனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்த நிலையில் லால் சலாம் படம் செப்டம்பர் 20 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.
தங்கலான்:
சார்பட்டா பரம்பரைக்குப் பிறகு இயக்குனர் பா.இரஞ்சித் கடைசியாக இயக்கிய படம், நட்சத்திரம் நகர்கிறது. அதனைத் தொடர்ந்து, அவர் பல ஆண்டுகளாக இயக்கிய படம் தான் இந்த தங்கலான். இந்த படத்தில் நடிகர் விக்ரம், நடிகை பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு , ஒகேனக்கல், மதுரை, ஆந்திராவின் கடப்பா போன்றப் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியான தங்கலான் திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தலைவெட்டியான் பாளையம்:
சமூக வலைத்தளத்தில் பிரபலமான ஸ்டேண்டப் காமடியன் அபிஷேக் குமார் நடித்துள்ள திரைப்படம் தலைவெட்டியான் பாளையம். பாலிவுட்டில் வெளியான ‘பஞ்சாயத்’ தொடரின் ரீ-மேக் தான் இந்த ‘தலைவெட்டியான் பாளையம்’. இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
மேலும் படிக்க: செப்டம்பர் மாத தியேட்டர் ரிலீஸ் தமிழ் படங்கள்.. தி கோட் முதல் லப்பர் பந்து வரை!
டிமான்டி காலனி 2:
2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் ஹாரர் திரில்லர் திரைப்படம் டிமான்டி காலனி. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எட்டு வருடங்களுக்கு பிறகு டிமான்டி காலனி 2 திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசானது. இந்த திரைப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், அருண்பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது டிமான்டி காலனி 2 படத்தின் உரிமையை ஜி 5 நிறுவனம் வாங்கியுள்ளது. அந்த வரிசையில் செப்டம்பர் 27 ஆம் தேதி இந்த திரைப்படம் ஜி 5 யில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation