September Release Movies: செப்டம்பர் மாத தியேட்டர் ரிலீஸ் தமிழ் படங்கள்.. தி கோட் முதல் லப்பர் பந்து வரை!

செப்டம்பர் மாதம் தியேட்டரில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

movies in september

ஒவ்வொரு மாதமும் புது புது படங்கள் தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. காதல், கிரைம் த்ரில்லர், நட்பு, ஆக்ஷன் போன்ற பல ஜானர்களில் திரைப்படங்களில் உருவாகி வருகிறது. தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது ஒரு வகையான பொழுதுபோக்கு என்று தான் கூறவேண்டும். அந்த வரிசையில் செப்டம்பர் மாதம் தியேட்டரில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT):

goatmain  ()

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் சூப்பர் ஹிட் திரில்லர் திரைப்படம் கோட். நடிகை மீனாக்ஷி சவுத்ரி, பிரசாந்த், பிரபு தேவா, லைலா, ஸ்னேஹா, ஜெயராம் உள்ளிட்ட ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்துள்ளது. செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை செய்து வருகிறது. இந்த திரைப்படத்தை தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி 'AGS என்டர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கோழிப்பண்ணை செல்லதுரை:

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் யோகி பாபு, யூடியூப் பிரபலம் ஏகன், பிரிகிடா சாகா, ஐஸ்வர்யா தத்தா என பல தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம் கோழிப்பண்ணை செல்லதுரை. இந்த படத்தினை தயாரிப்பாளர் அருளானந்து 'விஷன் சினிமா ஹவுஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் என் ஆர் ரகுநந்தன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் செப்டம்பர் 20 ஆம் தேதி கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது.

லப்பர் பந்து:

lubberpandhu

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை சஞ்சனா, அட்டகத்தி தினேஷ் என பலர் நடிக்கும் திரைப்படம் லப்பர் பந்து. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். கிரிக்கெட் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஹிட்லர்:

இயக்குனர் தனா இயக்கத்தில் நடிகர் விஜய் ஆன்டனி, நடிகை ரியா சுமன், கவுதம் மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம் ஹிட்லர். இந்த படத்தினை தயாரிப்பாளர் சஞ்சய் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசைக்குழு இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்த திரைப்படம் தியேட்டர்களில் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

மெய்யழகன்:

இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடிக்கும் திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தினை நடிகர் சூர்யா தனது '2 டி என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த வசந்தா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் மெய்யழகன் செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP