சீறிய ராணவிடம் பேய் ஆட்டம் ஆடிய சவுண்ட் சவுந்தர்யா, ஜாக்குலின்; பிரளயமான பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனில் பொம்மை டாஸ்க்கின் போது ராணவ் கோபத்தில் பேசிய சில வார்த்தைகளால் வீடு களேபரமானது. சவுண்ட் சவுந்தர்யாவும், ஜாக்குலினும் ராணவிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர்.
image

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனின் முதல் சில வாரங்களில் சாப்பாட்டுக்கு மல்லுக்கட்டி கொண்டிருந்த போட்டியாளர்கள் தங்களை நிரூபித்துக்கொள்ள விளையாடும் டாஸ்க்கில் தனிநபர் தாக்குதலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். ஹோட்டல், பள்ளி, அரண்மனை டாஸ்க்கில் கூட்டாக விளையாடிய போட்டியாளர்கள் இந்த வாரம் கொடுக்கப்பட்ட பொம்மை டாஸ்க்கில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொள்ளும் அளவிற்கு மல்லுக்கட்டியுள்ளனர். கில்லர் டாஸ்க்கில் அரங்கேறிய காட்சிகளை விட இரண்டு மடங்கு அதிகமாக சண்டை செய்கின்றனர். நவம்பர் 28ல் வெளியான முதல் ப்ரோமோவில் ராணவ் - ராயன் மோதுவதும் மோதுகின்றனர். இரண்டாவது ப்ரோமோவில் ராணவ் கோபத்தில் பேசியதால் சவுண்ட் சவுந்தர்யா பேய் ஆட்டம் ஆடியுள்ளார்.

ராணவ் Vs சவுண்ட் சவுந்தர்யா, ஜாக்குலின்

பொம்மை டாஸ்க்கில் ராணவ், ராயன் மற்றும் ஜெஃப்ரி களமிறங்கி மோதுகின்றனர். அப்போது ஏற்பட்ட குளறுபடி குறித்து ராணவிடம் ஜாக்குலின் விவாதிக்கிறார். உடனடியாக ராணவ் ஜாக்குலினிடம் கைநீட்டி கோபத்தில் ஏதோ பேசிவிடுகிறார். இந்த வாக்குவாதம் நடக்கும் போது ஜாக்குலின் அருகில் அமர்ந்திருப்பது சவுந்தர்யா. அவர் கோபத்தில் வெகுண்டு எழுந்து என்ன இப்படியெல்லாம் பேசுற என கத்துகிறார். ராணவ் சவுந்தர்யாவிடம் நீயும் வாயை மூடு என்கிறார்.

பிறரிடம் மரியாதை கொடுக்க கற்றுக்கொள் ராணவ் என சவுந்தர்யா கத்துகிறார். இப்படி சண்டை முற்ற ராணவ் வேறு வழியின்றி மன்னிப்பு கேட்கிறார். ஆனால் சவுந்தர்யாவும், ஜாக்குலினும் அதை ஏற்க மறுக்கின்றனர். நான் உன்னை அறைந்துவிட்டு மன்னிப்பு கேட்டால் ஏற்பியா என்றார். சவுந்தர்யா சாரி, பூரி எல்லாம் வேண்டாம் என அதிகமான கோபத்தை வெளிப்படுத்தினார். லைவில் இந்த பிரச்னைக்கு காரணம் ஜெஃப்ரி என்பதும் தெரிய வருகிறது. பொம்மை டாஸ்க்கில் பிடிக்க முயற்சிக்கும் போது ஜெஃப்ரி ராணவின் முகத்தில் அடித்து விடுகிறார். தெரிந்து செய்தாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

ராணவ் vs ராயன்

முதல் ப்ரோமோவில் பொம்மை எடுப்பதில் ராணவ் ராயன் இடையே மோதல் ஏற்படுகிறது. ராணவிடம் அடித்து வாயை உடைத்துவிடுவேன் என ராயன் ஆத்திரத்தில் அடிக்க செல்கிறார். இதை சற்றும் எதிர்பாராத ராணவும் சண்டைக்கு தயாராகிறார். சண்டையை தடுக்க அனைத்து போட்டியாளர்களும் களத்தில் குதிக்கின்றனர். ராயனை சக போட்டியாளர்கள் இழுத்துச் செல்கின்றனர். ராணவை அருண், முத்துக்குமரன் கட்டுப்படுத்துகின்றனர். என்னை உன்னால் எதுவுமே செய்ய முடியாது என ராயன் கூறுவதோடு ப்ரோமோ முடிகிறது.

இந்த வாரம் இரண்டு போட்டியாளர்களுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்படுவது உறுதி என பிக்பாஸ் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் அப்டேட்களுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP