"அருண் ஷட் அப் பண்ணுங்க" பிக்பாஸ் வீட்டில் எகிறிய பெண் போட்டியாளர்கள்

பிக்பாஸ் வீட்டில் கேப்டன் மஞ்சரி சக போட்டியாளர்களுடன் முக்கியமான விஷயத்தை பேசும் போது அருண் கிண்டல் அடித்ததாக தெரிகிறது. இதையடுத்து பவித்ரா ஜனனி, சவுண்ட் சவுந்தர்யா, ஜாக்குலின் அருணுக்கு எதிராக கொதித்தெழுந்தனர்.
image

பிக்பாஸ் தமிழ் 8வது சீசன் தொடங்கி 40 நாட்களை கடந்தும் சின்ன சின்ன பிரச்னைகள் ஓய்ந்ததாக தெரியவில்லை. உணவு பகிர்வு, ஷாப்பிங்கில் சொதப்பல் என அடிப்படை தேவைகளில் கூட குழுவாக செயல்படாமல் சண்டையிடுகின்றனர். இந்த வார ஷாப்பிங்கில் சாச்சனாவின் ஆர்வக் கோளாறால் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. நவம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட 4 ப்ரோமோவிலும் மஞ்சரியின் கேப்டன்ஸி, உணவு பிரச்னை, அருணை பெண் போட்டியாளர்கள் ரவுண்டு கட்டுவது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த வார கேப்டனான மஞ்சரி முக்கியமான விஷயத்தை பேசும் போது அருண் ஏடா கூடமாக பேசிவிட்டது போல் தெரிகிறது. இதையடுத்து பெண் போட்டியாளர்கள் அவருக்கு எதிராக கொதித்தெழுந்துள்ளனர். கேப்டன் மஞ்சரி மிகுந்த வருத்தத்தில் கண் கலங்கி இருக்கிறார்.

biggboss arun

அருண் - மஞ்சரி மோதல்

முதல் சில வாரங்கள் மிகவும் அமைதியாக காணப்பட்ட அருண் திடீரென அனைத்து விஷயங்களில் வரிந்து கட்டி தலையிடுவது போல் தெரிகிறது. ப்ரோமோவின் படி மஞ்சரி போட்டியாளர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து முக்கியமான விஷயம் குறித்து பேச முயற்சிக்கிறார். திடீரென அருணிடம் வந்ததில் இருந்து உங்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்; ஒரு முக்கியமான விஷயத்தை பேசும் போது கிண்டல் அடிப்பது போல ஏதாவது செய்கிறீர்கள் என மஞ்சரி கூறுகிறார். அருண் வெகுண்டு எழுந்து எப்போதுமே என்னை பார்த்து கிண்டல் (மாக்) பண்ணாதே என்கிறீர்கள் எனவும் இதை ஏற்க முடியாது எனவும் வாதிடுகிறார். இதற்கு மஞ்சரி நீங்கள் எப்போதும் ஒரு உரையாடலை நீர்த்துப்போகும் வகையில் ஏதாவது செய்கிறீர்கள் என்றும் இதை கேலி அல்லது பகடி என குறிப்பிடலாமா ? என்றும் கேட்கிறார்.

அருண் Vs ஜனனி, சவுண்ட் சவுந்தர்யா

இதற்கிடையில் பவித்ரா ஜனனி உங்களுக்கு மட்டுமே பேச தெரியும் என்பது போல் பேசாதீர்கள் எனவும் நான் மஞ்சரிக்கு ஆதரவாக பேசவில்லை எனவும் கூறுகிறார். அருணும் சண்டையே உங்களால் தான் என பதிலளிக்க சவுண்ட் சவுந்தர்யா அருண் ஷட் அப் பண்ணுங்க என கோவத்தில் கத்துகிறார். ஜாக்குலினும் தன் பங்கிற்கு அருணிடம் ஏதோ சொல்கிறார். வீடு களேபரமான நிலையில் அருணை சக போட்டியாளர் தீபக் அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். முத்துக்குமரன் தலையிட்டு ஜனனியை அமைதிப்படுத்த முயற்சிக்கிறார். கேப்டன் மஞ்சரி தலையை பிடித்துக் கொண்டு எல்லோரும் நிறுத்துங்க என கெஞ்சுகிறார். இத்துடன் ப்ரோமோ நிறைவடைகிறது.

மூன்றாவது ப்ரோமோவில் மஞ்சரியின் கேப்டன் பதவி பறிக்கப்படுவது போலவும், நான்காவது ப்ரோமோவில் சாச்சனா எல்லா டாக்ஸ்கிலும் அடம்பிடித்து பங்கேற்பதாக சக போட்டியாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். டிவியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது யார் மீது தவறு என தெரிந்துவிடும்.

மேலும் படிங்கபிக்பாஸ் சீசன் 8 : ரியாவை வீட்டிலிருந்து அனுப்பிய விஜய் சேதுபதி

பிக்பாஸ் தொடர்பான அப்டேட்களுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP