பிக்பாஸ் தமிழ் : இந்த வார நாமினேஷனில் 7 போட்டியாளர்கள்; தப்பிய அருண்

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனில் இந்த வார எவிக்‌ஷனுக்கு 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். முத்துக்குமரன், ராயன், தீபக், சவுண்ட் சவுந்தர்யா, அருண் எவிக்‌ஷனில் இருந்து தப்பியுள்ளனர்.
image

பிக்பாஸ் தமிழ் 8வது சீசன் முடிவதற்கு இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ளது. வீட்டிற்குள் முதல் நாளில் சென்ற 18 போட்டியாளர்கள், 20 நாட்களுக்கு பிறகு இணைந்த 6 வைல்ட் கார்டு போட்டியாளர்களில் இதுவரை 12 பேர் எலிமினேட் செய்யப்பட்டு 12 பேர் போட்டியில் தொடர்கின்றனர். முந்தைய இரண்டு வாரங்களில் டபுள் எவிக்‌ஷன் நடைபெற்றது. டிசம்பர் 21ஆம் தேதி கவுண்டம்பாளையம் புகழ் நடிகர் ரஞ்சித் வெளியேற்றப்பட்டார். அவரை மனைவி பிரியா ராமன் நேரில் வந்து அழைத்துச் சென்றார். இந்த வார எவிக்‌ஷனுக்கு 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் தமிழ் எவிக்‌ஷன்

டிசம்பர் 23ல் வெளியான முதல் ப்ரோமோவின்படி ஜாக்குலின் அன்ஷிதாவை நாமினேட் செய்கிறார். அன்ஷிதா பாசத்தை கருவியாக பயன்படுத்தி வீட்டிற்குள் விளையாடுவதாக பிக்பாஸிடம் ஜாக்குலின் குற்றம்சாட்டுகிறார். அடுத்ததாக ஜாக்குலின் அருணை நாமினேட் செய்தார். ஜாக்குலின் நட்புறவை யுக்தியாக கொண்டு விளையாடுவதாக அருண் குறிப்பிட்டார். ஜெஃப்ரியை நாமினேட் செய்த ராயன் நல்ல பெயரை தக்கவைத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு வாரமும் ஒருவருடன் பழகுவதாக கூறி எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்தார். மஞ்சரியை நாமினேட் செய்த அன்ஷிதா அவர் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு போட்டியில் விளையாடுவதாக கூறினார். ராணவ் ஒரு குழப்பமான போட்டியாளர் என பிக்பாஸிடம் தெரிவிக்கிறார் தீபக்.

பிக்பாஸ் தமிழ் நாமினேஷன்

சவுண்ட் சவுந்தர்யா - அன்ஷிதா, ஜெஃப்ரி
அன்ஷிதா - ஜாக்குலின், மஞ்சரி
தீபக் - ராணவ், ஜெஃப்ரி
அருண் - அன்ஷிதா, ஜாக்குலின்
ராயன் - விஷால், ஜெஃப்ரி
பவித்ரா - விஷால், தீபக்
ஜாக்குலின் - பவித்ரா, அன்ஷிதா
விஷால் - பவித்ரா, மஞ்சரி
மஞ்சரி - பவித்ரா, ராணவ்
ராணவ் - அன்ஷிதா, மஞ்சரி
ஜெஃப்ரி - ஜாக்குலின், மஞ்சரி
முத்துக்குமரன் - அன்ஷிதா, ராணவ்

நாமினேஷனில் அதிகமாக கூறப்பட்ட பெயர் அன்ஷிதா. அவரை 5 பேர் நாமினேட் செய்தனர். மஞ்சரியை 4 பேர் நாமினேட் செய்தனர். ஜெஃப்ரி, பவித்ரா, ஜாக்குலின் பெயர்களை தலா 3 பேர் கூறினர். ராணவ், விஷால் தலா இரண்டு வாக்குகளோடு நாமினேட் ஆகினர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கேப்டன்ஸி டாஸ்க்கில் சொதப்பிய முத்துக்குமரன், தொழிலாளர் டாஸ்க்கில் கடும் எதிர்ப்பை சந்தித்த அருணை யாரும் நாமினேட் செய்யவில்லை. சவுந்தர்யா, தீபக், ராயன் ஆகியோரும் நாமினேஷில் இருந்து தப்பினர்.

இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனுக்கு அதிக வாய்ப்புள்ளது. பிக்பாஸ் அப்டேட்களுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP