பிக்பாஸ் வீட்டில் இருந்து நடையை கட்டிய தர்ஷிகா, சத்யா; இந்த வார எலிமினேஷன்

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனில் இருந்து போட்டியாளர்கள் சத்யா மற்றும் தர்ஷிகா நடையை கட்டியுள்ளனர். சனிக்கிழமை எபிசோடில் சத்யாவும், ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் தர்ஷிகாவும் வீட்டை விட்டு அனுப்பபட்டனர்.
image

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக டபுள் எவிக்‌ஷன் நடைபெற்றுள்ளது. முந்தையை சீசன்களில் எப்போதும் அடுத்தடுத்த வாரங்களில் டபுள் எலிமினேஷன் செய்யப்படவில்லை. இந்த சீசனில் கடந்த வாரம் முதல் எலிமினேஷனாக ஆர்.ஜே.ஆனந்தியும், இரண்டாவது எலிமினேஷனாக சாச்சனாவும் வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகும் 15 போட்டியாளர்கள் தொடர்ந்த நிலையில் இரண்டாவது வாரமாக டபுள் எலிமினேஷன் நடந்துள்ளது. முதல் இரண்டு வாரம் கேப்டன் பொறுப்பு வகித்த தர்ஷிகாவும், ஒரு முறை கேப்டன்சியில் இருந்த சத்யாவும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். டிச.14ல் ஒளிபரப்பட்ட இரண்டாவது ப்ரோமோவின்படி நிக்ழ்ச்சியை எவிக்‌ஷனோடு விஜய் சேதுபதி ஆரம்பித்துள்ளார்.

பிக்பாஸ் சத்யா வெளியேற்றம்

கட்டுமஸ்தான உடல் கம்பீரமான தோற்றத்துடன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சத்யா இந்த வார முதல் எலிமினேஷன் ஆவர். உடல் எடையைக் கட்டுப்கோப்பாக வைத்திருப்பதிலேயே கவனமாக இருந்த சத்யா கேப்டன்சி வாய்ப்பிலும் தனித்துவத்தை காட்டவில்லை என்றே கூறலாம். வீட்டில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை மட்டுமே சரியாக செய்து வந்தார். எந்தவித வம்பு தும்புக்கும் போகாமல் சண்டைகளை வேடிக்கை பார்த்தார் என்றே சொல்லலாம். சத்யா யாருடனுடம் இணக்கமாக இருந்ததாக தெரியவில்லை.

நடையை கட்டிய தர்ஷிகா

18 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் சீசன் ஆரம்பித்த போது கேப்டன்ஸியை தர்ஷிகா சாதுர்யமாக அடைந்தார். இரண்டு வாரங்களுக்கு கேப்டனாகவும் செயல்பட்டார். இந்த சீசனின் வலிமையான போட்டியாளர் மற்றும் இறுதிவரை செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த போட்டியாளர்களில் தர்ஷிகாவும் ஒருவர். தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்களை தர்ஷிகா கூறிய போது மிக வலிமையான போட்டியாளராக தென்பட்டார். தேவையான நேரங்களில் தர்ஷிகா தனது குரலையும் உயர்த்தினார்.

தர்ஷிகா - விஷால் காதல் ட்ராக்

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் போட்டியில் இருந்து தர்ஷிகாவின் கவனம் திசைமாறியது. திடீரென விஷாலுடன் லவ் ட்ராக் ஆரம்பித்தது. ப்ரோமோவிலும் இருவரும் காதலிப்பது போன்ற காட்சிகள் இருந்தன. முழுவதுமாக போட்டியை விட்டு வெளியே செல்வது போல் தெரிந்தது. இந்த வார நாமினேஷில் 9 போட்டியாளர்கள் இருந்ததால் ரசிகர்களின் வாக்குகளை பெறுவதிலும் தர்ஷிகாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. போதாத குறைக்கு ஏஞ்சல்- டெவில் டாஸ்க்கில் ஜாக்குலினுடன் தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடுவது போலவும் தெரிந்தது. பவித்ரா ஜனனி தர்ஷிகாவை ஜாடை மாடையாக எச்சரித்து காதல் ட்ராக்கில் போன காரணத்தால் இம்முறை விஜய் சேதுபடி அப்படியே அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.

பிக்பாஸ் அப்டேட்களுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP