
பிக்பாஸ் தமிழ் 8வது சீசனில் 84 நாட்கள் அதாவது ஏறக்குறைய 12 வாரங்கள் முடிவடைந்துவிட்டது. அடுத்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெறவுள்ள காரணத்தால் பிக்பாஸில் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது. முந்தைய வாரங்களில் சாச்சனா, ஆர்.ஜே.ஆனந்தியும் அதன் பிறகு சத்யாவும், தர்ஷிகாவும் வெளியேற்றப்பட்டு இருந்தனர். கடந்த வாரம் நடிகர் ரஞ்சித் வீட்டை விட்டு அனுப்பபட்டார். 18 போட்டியாளர்கள், 6 வைல்ட் கார்டு போட்டியாளர்களுடன் நகர்ந்த பிக்பாஸ் தமிழ் சீசனில் இந்த வார டபுள் எவிக்ஷனுக்கு பிறகு 10 பேர் மட்டுமே போட்டியில் தொடர்கின்றனர்.
பிக்பாஸ் வட்டாரத்தில் இருந்து நமக்கு கிடைத்த தகவலின்படி சனிக்கிழமை எபிசோடில் ஜெஃப்ரியும், ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் அன்ஷிதா வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. குறைந்தபட்ச வாக்குகளை பவித்ரா ஜனனி, அன்ஷிதா, மஞ்சரி பெற்றிருந்த நிலையில் அன்ஷிதாவை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இதில் ஜெஃப்ரியை விட அன்ஷிதாவை மற்றவர்களுக்கு கடும் சவால் அளித்த போட்டியாளராக குறிப்பிடலாம். எல்லா டாஸ்கிலும் 100 விழுக்காடு பங்களிப்பை கொடுத்தவர்.
மேலும் படிங்க பிக்பாஸ் தமிழ் : இந்த வார நாமினேஷனில் 7 போட்டியாளர்கள்; தப்பிய அருண்
ஆரம்பத்தில் இடம் தெரியாமல் இருந்த ஜெஃப்ரி விஜய் சேதுபதியின் பேச்சை கேட்ட பிறகு தனித்தன்மையுடன் சில நாட்களுக்கு விளையாடினார். அதன் பிறகு கோவா குழுவில் சிக்கினார். நாமினேஷன் பாஸ் கிடைப்பதற்கு அருண், விஷாலுடன் சேர்ந்ததால் கெட்ட பெயர் வாங்கினார். விஜய் சேதுபதியும் இது உனக்கே நியாயமா என முகத்திற்கு நேராக கேள்வி எழுப்பினார். சவுந்தர்யாவுடன் விளையாடுவதற்கே ஜெஃப்ரிக்கு நேரம் சரியாக இருந்தது. தனித்துவத்தை தவறவிட்டு ஒவ்வொரு வாரமும் எவிக்ஷனில் தப்பினார். போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட ஏழு பேரில் ஜெஃப்ரியும் ஒருவர். ஜாக்குலின், அன்ஷிதா, மஞ்சரி, பவித்ரா, ராணவ், ஜெஃப்ரி, விஷால் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். முத்துக்குமரன், அருண், தீபக், சவுந்தர்யா, ராயன் நாமினேஷலின் தப்பினர். இதையடுத்து அன்ஷிதா, ஜெஃப்ரி வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.
#Day83 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) December 28, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/acPs6JuVKv
இன்னும் 10 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் தொடர்கின்றனர். டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கின் மூலம் ஒரு போட்டியாளர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிடுவார். மீதமுள்ள 4 இடங்களுக்கு கடும் சவால் நிலவப் போகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
பிக்பாஸ் அப்டேட்களுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com