பிக்பாஸ் தமிழ் 8வது சீசன் ஒரு மாதத்தை நிறைவு செய்ய உள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் தமிழில் ஃபேட் மேன் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேற்றப்பட்டு போட்டியாளர்கள் எண்ணிக்கை 15 ஆக குறைந்தது. சுவாரஸ்யம் இன்றி மிகுந்த கவனத்துடன் போட்டியாளர்கள் விளையாடுவதால் பிக்பாஸ் தமிழ் 8 சீசன் மீது இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன். இதை பார்த்த விஜய் டீவி வீட்டை சுவாரஸ்யமாக மாற்றிட 6 வைல்ட் கார்டு போட்டியாளர்களை களமிறக்கியுள்ளது. மேலும் இந்த வார எவிக்ஷனும் தவிர்க்கப்பட்டுள்ளது.
வைல்ட் கார்டு 1 - சிவகுமார்
பிக்பாஸ் சீசன் 1ல் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த சுஜா வருணேவின் கணவன் சிவகுமார் 8வது சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்துள்ளார். இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பிபி ஜோடிகள் 2 வின்னர் பட்டமும் வென்றவர். ஆண்கள் அணியில் களேபரம் ஏற்படுத்துவாரா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ரியா தியாகராஜன்
ரானவ்
மஞ்சரி நாராயணன்
இவருக்கும் முத்துக்குமரனுக்கும் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டில் மோதல் உண்டாகும் என்றே சொல்லலாம். விஜய் டிவியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் உரையாற்றுபவர் மஞ்சரி நாராயணன்.
வர்ஷினி வெங்கட்
இவரும் மாடலிங் பின்னணி கொண்டவர். மிஸ் தென் இந்தியா அழகி போட்டியில் ரன்னர் அப் ஆனவர். சில படங்களில் நடித்து வருகிறார். பாடகியும் கூட.
ராயன்
சன் மற்றும் விஜய் டிவியின் தொடர்களில் நடித்தவர் இந்த ராயன். இன்ஸ்டாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இவரை பின்தொடர்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் தொடரில் இவரை பார்த்திருப்பீர்கள்.
மேலும் படிங்க"கட்டம் சரியிருந்தா பிக்பாஸ் வந்திருப்பேனா" உண்மையை உளறிய சாச்சனா
ஏற்கெனவே விஜய் டீவி தனக்கு தெரிந்த ஆட்களை மற்ற பங்கேற்க வைக்கிறது, சீனியர் ஜுனியர் போல பிக்பாஸ் வீடு உள்ளதென போட்டியாளர்களில் ஒருவரே விமர்சித்த போதிலும் மீண்டும் விஜய் டிவி தன்னுடைய ஆட்களையே வீட்டிற்குள் அனுப்புகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation