"கட்டம் சரியிருந்தா பிக்பாஸ் வந்திருப்பேனா" உண்மையை உளறிய சாச்சனா

கட்டம் சரியாக இருந்தால் நம்ம ஏன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருக்க போறோம் என சக போட்டியாளர் சத்யாவிடம் சாச்சனா உளறிக் கொட்டியுள்ளார். ஆரம்பத்தில் விஜய் சேதுபதியிடம் தனக்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக கூறியிருந்தார். ஏன் மாற்றி மாற்றி பேசுகிறார் என ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.
image

பிக்பாஸ் தமிழ் 8வது சீசன் 4 வாரங்களை கடந்து ஒரு மாதத்தை தொட இருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் தலா 9 ஆண், 9 பெண் என தொடங்கிய பிக்பாஸில் வீட்டில் இருந்து மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். ஃபேட் மேன் ரவீந்தர், அர்னவை தொடர்ந்து தர்ஷா குப்தா மூன்றாவது வாரத்தில் வெளியேற்றப்பட்டார். ஹோட்டல் டாஸ்க், மாறு வேடம் என சென்று கொண்டிருந்த பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக தீபாவளி கொண்டாட்டம் அரங்கேறியது. இந்த நிலையில் மகாராஜா சாச்சனா கட்டம் சரியா இருந்தால் நம்ம ஏன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருக்க போறோம் என்று சத்யா, தர்ஷிகாவிடம் உளறிக் கொட்டியுள்ளார்.

சாச்சனாவின் சேட்டை

உண்மையை சொல்லப் போனல் இந்த சீசனில் முதல் ஆளாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது சாச்சனா தான். பிக்பாஸ் கூறிய விதியை பின்பற்றி சகபோட்டியாளர்கள் சாச்சனாவை தேர்ந்தெடுத்து வீட்டை விட்டு வெளியேற்றினர். எனினும் சீக்ரெட் ரூமிற்குள் 3 நாட்களாக வீட்டிற்குள் நடந்ததை வேடிக்கை பார்த்து மீண்டும் உள்ளே நுழைந்தார். அந்த வாரம் ஃபேட் மேன் ரவீந்தர் வெளியேற்றபட்டார். சீசனின் தொடக்கத்தில் உனக்கு தான் மகாராஜா படம் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயர், புகழ் கிடைத்துவிட்டதே இங்கு வர எண்ண காரணம் என விஜய் சேதுபதி கேட்டதற்கு திரைப்படங்கள் நடித்ததெல்லாம் என் அம்மாவிற்காக; இந்த பிக்பாஸ் மேடை தனக்கானது என்று நம்பி வந்திருப்பதாக கூறினார்.

சாச்சனா நடிக்கிறாரா ?

முதல் வாரத்திற்கு பிறகு எவிக்‌ஷனில் இருந்து சாச்சனா எளிதில் தப்பி விடுகிறார் என்றே சொல்லாம். சாப்பாட்டு பிரச்னை, சுனிதாவுடன் மேக்கப் பிரச்னை, ஆண் - பெண் அணிகளிடையே பொய் பேசி சிக்கி கொள்வது என பிக்பாஸ் ரசிகர்களுக்கு கன்டென்ட் தற்போது வீட்டில் காயத்தால் அவதிப்படுவது போல் காட்டப்படுகிறது. காலில் ஏற்பட்ட காயத்திற்கு 6 மாதத்திற்கு நடக்க முடியாதது போல் சீன் போட்டார். ஆனால் அடுத்த நாளே டாஸ்க்கில் சுறுசுறுப்பாக நடந்து மாட்டிக் கொண்டார். சத்யாவும், முத்துக்குமரனும் சாச்சனா நடந்த வேகத்தை பார்த்து வியந்தனர்.

பிக்பாஸ் கட்டம் சரியில்லை - சாச்சனா

இந்த நிலையில் நீண்ட நாட்களாக மனதிற்கு மறைத்து வைத்திருந்த உண்மையை போட்டு உடைத்துள்ளார். நொண்டி நொண்டி நடந்த சாச்சனாவை பார்த்து சத்யா இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து டாக்டரும் கையுமாக சுத்திட்டு இருக்க என கூறினார். இதற்கு ஒரு சில நேரம் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் ஜாதகத்தை பார்த்து ஒன்னு சொல்வார்கள் அல்லவா அது போல தான் என்றார் சாச்சனா. இதற்கு அங்கிருந்த தர்ஷிகா ஜாதகத்தில் யாருக்கும் கட்டம் சரியாக இல்லை என பேசினார்.

சற்றும் தாமதிக்காமல் கட்டம் சரியிருந்தா நம்ம ஏன் பிக்பாஸ் வீட்டிறுக்கு வந்திருக்க போறோம் என்றார் சாச்சனா. அவர் கூறியதை கேட்டு தர்ஷிகா ஷாக் ஆக... எல்லாம் உன் சேட்டை என்றும் தெரியாமல் லூஸ் டாக் பேசிட்டியே குட்டி என்றும் சாச்சனாவிடம் சத்யா கூறினார். பார்த்து பேசு என்றதற்கு இதில் என்ன இருக்கு கட்டம் மீண்டும் கட்டம் சரியிருந்தா நம்ம ஏன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருக்க போறோம் என்றார் சாச்சனா. இது போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல பிக்பாஸ் ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP