
பிக்பாஸ் தமிழ் 8 சீசன் தொடங்கிய முதல் நாளிலேயே சூடு பிடித்துள்ளது. யாரும் எதிர்பாராதவிதமாக 24 மணி நேரத்திற்குள் பிக்பாஸ் எவிக்ஷனை அறிவித்து போட்டியாளர்கள் முடிவெடுத்து ஒருவரை வெளியேற்ற வேண்டும் என தெரிவித்தார். அதன்படி மகாராஜா புகழ் விஜய் சேதுபதியின் செல்லப்பிள்ளை சாச்சனா வெளியேற்றபட்டார். அழுதுகொண்டே வீட்டை விட்டு மிகுந்த வருத்தத்துடன் வெளியேறினார். சரி இந்த வார எவிக்ஷன் முடிந்துவிட்டது என போட்டியாளர்கள் நினைத்த நிலையில் பிக்பாஸ் மீண்டும் ட்விஸ்ட் வைத்து லிவிங் ஏரியாவில் முதல்வார நாமினேஷனை அறிவித்தார். இதில் அதிக வாக்குகளை பெற்று விஜய் டிவி ஜாக்குலின், அருண் பிரசாத், ஃபேட் மேன் ரவீந்தர், நடிகர் ரஞ்சித், முத்துக்குமரன், செளந்தர்யா முதல் வார எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டனர்.
#Day1 #Promo3 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 7, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil pic.twitter.com/1ZTIHrhmDT
சாச்சனா வெளியேற்றப்பட்ட நிலையில் 17 போட்டியாளர்களை மாறி மாறி நாமினேட் செய்தனர்
நாமினேஷன் முடிந்த பிறகு தர்ஷா குப்தா நடிகர் ரஞ்சித்திடம் சென்று நீங்க பிடிச்ச மாதிரி பேசிட்டு பூசி முழுகி பேசிட்டு கடைசியா நாமினேட் செஞ்சீங்க. அதை நேரடியாகவே சொல்லி இருக்கலாம் என்றார். இதற்கு ரஞ்சித் நான் நீளமா சொல்லுவேங்க; சிலர் கைல பல் தேய்பாங்க நான் பிரஷ்ல் தேய்ப்பேன் என்று மழுப்பிவிட்டு சென்றார்.
பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனை தேர்வு செய்ய 8 பெண்களுக்கும், 9 ஆண்களுக்கும் இடையே போட்டி நடந்தது. இதில் விதிகள் புரியாமல் பெண்கள் அணி சொதப்பியது. தர்ஷிகாவும் தீபக்கும் கேப்டன் பதவிக்கு மோதினர். ஆர்.ஜே ஆனந்திக்கும், அன்ஷிதாவுக்கும் விதிகள் சரியாக புரியவில்லை. எனினும் தர்ஷிகா போட்டியில் வென்று கேப்டனாக தேர்வானார். இதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என தீபக் கூறினார். சில நிமிடங்கள் கழித்து சீரியல் நடிகர் அருண் பிரசாத் இது கேப்டன்ஸிக்கான போட்டியா என கேட்டார். இதற்கு விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதை ராமன் சித்தப்பன் என்பது போல் நீ பேசுற என தீபக் கிண்டலடித்தார்.
பிக்பாஸ் அப்டேட்களுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com