
பிக்பாஸ் தமிழ் 8வது சீசன் 10வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸில் 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் மற்றும் வாரந்தோறும் எலிமினேஷனை தொடர்ந்து தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். சீசன் முடிவதற்கு 35 முதல் 40 நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்கள் கூட வெளியேற வாய்ப்புள்ளது. கடந்த வாரம் எலிமினேஷனில் முதலில் ஆர்.ஜே.ஆனந்தியும், இரண்டாவதாக சாச்சனாவும் வெளியேற்றப்பட்டனர். சாச்சனா வெளியேற்றப்பட்ட போது முத்துக்குமரன் கண்ணீர் மல்கினார். இந்த வார நாமினேஷனில் 9 போட்டியாளர்கள் உள்ளனர்.
டிசம்பர் 9ஆம் தேதி வெளியான முதல் ப்ரோமோவின்படி சத்யா பவித்ராவையும், அருணையும் நாமினேட் செய்கிறார். பவித்ராவை பாய்சன் எனவும் அருணை டிவிஸ்டர் எனவும் குறிப்பிட்டு சத்யா நாமினேஷன் செய்கிறார். அன்ஷிதா நாமினேஷனில் ஜாக்குலினை நடிகை என்கிறார். விஷாலை சகுனி எனக் குறிப்பிட்டு நாமினேட் செய்கிறார் முத்துக்குமரன். தர்ஷிகா சவுண்ட் சவுந்தர்யாவை புஸ்வானம் எனக் கூறி பிக்பாஸிடம் நாமினேட் செய்கிறார். இதே போல ஜாக்குலின் அருணை காரியவாதி என்றும் சவுந்தர்யா தர்ஷிகாவை விஷப்பாம்பு என்றும் கூறி நாமினேஷன் வலையில் சிக்க வைக்கின்றனர். ராயனிடம் அடிதடிக்கு சென்ற ராயன் சத்யாவை பயந்தாங்கோலி என்று குறிப்பிடுகிறார்.
#Day64 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) December 9, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/MCn9TNt8n8
இந்த வார கேப்டனாக ரஞ்சித் இருப்பதால் அவர் தப்பித்து கொண்டார். நாமினேஷன் பாஸ் மஞ்சரியிடம் உள்ளதால் அவரும் தப்பினார். முத்துக்குமரனை விஷாலை தவிர வேறு யாரும் நாமினேட் செய்யவில்லை. இதனால் ஒரு வாக்கு மட்டுமே பெற்று அவர் நாமினேஷனில் இருந்து தப்பினார்.
மேலும் படிங்க சீறிய ராணவிடம் பேய் ஆட்டம் ஆடிய சவுண்ட் சவுந்தர்யா, ஜாக்குலின்; பிரளயமான பிக்பாஸ் வீடு
மேலும் மிட் வீக் எவிக்ஷனும் இருக்கலாம் என கூறப்படுகிறது. பிக்பாஸ் அப்டேட்களுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com