பிக்பாஸ் வின்னருக்கு ரூ 40.5 லட்சம் தானா ? தீபக், ஜாக்குலினுக்கு சிறப்பு விருதுகள்

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னரான முத்துக்குமரனுக்கு 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தீபக், ஜாக்குலின், மஞ்சரிக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
image

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனில் 105 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். வாக்கெடுப்பு அடிப்படையில் சவுண்ட் சவுந்தர்யா முதல் ரன்னர் அப், விஜே விஷால் இரண்டாவது ரன்னர் அப் ஆகினர். பவித்ரா ஜனனிக்கு 4வது இடமும், ராயனுக்கு 5வது இடமும் கிடைத்தது. இதை தவிர்த்து சில சிறப்பு விருதுகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டன. கடந்த சீசன்களில் டைட்டில் வின்னர்களுக்கு 50 லட்சம் ரூபாய் தரப்பட்ட நிலையில் இம்முறை டைட்டில் வின்னர் முத்துக்குமரனுக்கு 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது.

பிக்பாஸ் முத்துக்குமரனுக்கு ரூ 41 லட்சம்

டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க்கிற்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்றது. இதில் முத்துக்குமரன் 50 ஆயிரம் ரூபாயும், ராயன் 2 லட்சம் ரூபாயும், பவித்ரா ஜனனி 2 லட்சம் ரூபாயும், விஜே விஷால் 5 லட்சம் ரூபாயும் வென்றனர். இதை மொத்தமாக கணக்கிட்டால் 9 லட்சத்து 50 ரூபாய் வருகிறது. ஏனோ தெரியவில்லை இம்முறை பணப்பெட்டி டாஸ்க்கின் போது வெற்றியாளருக்கு வழங்கப்படும் தொகையில் இருந்து அது குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக முத்துக்குமரனுக்கு 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயோடு அவர் பணப்பெட்டி டாஸ்க்கில் வென்ற 50 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து 41 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

பிக்பாஸ் சிறப்பு விருதுகள்

முன்னதாக 8வது சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு சில சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. வீட்டின் சிறந்த கேப்டன் விருதை தீபக் வென்றார். சீசன் தொடக்கத்தில் ஆண்கள் - பெண்கள் மோதல் போல் வீடு இருந்தது. இதை கேப்டன்ஸியில் தீபக் மாற்றி காட்டி வீட்டை ஒருங்கிணைத்தார். கேம் சேஞ்சர் விருது மஞ்சரிக்கு வழங்கப்பட்டது. வைல்ட் கார்டு போட்டியாளராக மஞ்சரிக்கு வீட்டிற்குள் சென்றாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றினார் என ரசிகர்கள் கூறுகின்றனர். வலுவான போட்டியாளர் விருது ஜாக்குலினுக்கும், டாஸ்க் பீஸ்ட் விருது ராயனுக்கும், சிறந்த யுக்தியாளர் விருது ஆர்.ஜே.ஆனந்திக்கும், கவன ஈர்ப்பாளர் விருது ராணவுக்கும் கிடைத்தன. வைல்ட் கார்டு போட்டியாளராக ராயன் உள்ளே வந்தாலும் டிக்கெட் டூ ஃபைனல், கடைசி 25 நாட்களில் நடந்த டாஸ்க்குகளில் அசத்தினார்.

டிவி சேனல்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த அப்டேட்களுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP