பிக்பாஸ் டைட்டில் வின்னர் : மகுடம் சூடிய முத்துக்குமரன்; 2வது இடம் யார் தெரியுமா ?

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் மகுடம் சூடியுள்ளார். அதிகப்படியான வாக்குகளை பெற்று முத்துக்குமரன் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார்.
image

100 நாட்களுக்கு மேல் நடைபெற்ற பிக்பாஸ் தமிழ் 8வது சீசனின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன். 2024ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி பிக்பாஸ் தமிழ் 8வது சீசன் தொடங்கியது. தொடக்க வாரத்தில் 9 ஆண், 9 பெண் போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றனர். அதை தொடர்ந்து 2 வாரங்கள் கழித்து 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். இந்த நிலையில் இறுதிவாரத்திற்குள் முத்துக்குமரன், ஜாக்குலின், சவுண்ட் சவுந்தர்யா, ராயன், பவித்ரா, விஜே விஷால் கால் வைத்தனர். ராயன் டிக்கெட் டூ ஃபைனல் வென்று இறுதி வாரத்திற்குள் முன்னேறினார். இந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க்கில் ஜாக்குலின் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள் வராத காரணத்தால் வெளியேற்றப்பட்டார். வாரம் முழுவதும் நடந்த வாக்கெடுப்பின்படி முத்துக்குமரன் அதிக வாக்குகளை பெற்று வெற்றியாளர் ஆகியுள்ளார்.

பிக்பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன்

இந்த சீசனின் 2 வாரத்தில் இருந்து முத்துக்குமரனின் ஆதிக்கம் தொடங்கியது. முத்துக்குமரனின் பேச்சை மறுக்க முடியாமல் அவருடைய பாதையிலேயே பெரும்பாலான ஆண் போட்டியாளர்கள் சென்றனர். ஒவ்வொரு டாஸ்க்கிலும் முத்துக்குமரன் முழு உழைப்பை செலுத்தினார். அதன் விளைவாக கேப்டன்ஸியும் கிடைத்தது. ஆனால் அதில் நிறைய குறைபாடுகள் இருந்தன. இதையடுத்து முத்துக்குமரன் தனித்துவமாக விளையாடுவதில் முனைப்பு காட்டினார். அருணை தவிர வேறு யாரும் முத்துக்குமரனை வீட்டிற்குள் பெரிதளவில் எதிர்க்கவில்லை. ராயன் முத்துக்குமரனின் விளையாட்டை புரிந்து கொண்டாலும் அதை முறியடிக்க முடியாமல் தடுமாறினார். சவுண்ட் சவுந்தர்யாவின் பிஆர் வேலைகளும் முத்துக்குமரனின் வெற்றியை தடுக்கவில்லை.

பிக்பாஸ் முத்துக்குமரன்

வீட்டில் நடந்த 80க்கும் மேற்பட்ட டாஸ்க்குகளில் முத்துக்குமரனின் பங்களிப்பு இருந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் அதிகப்படியான வாக்குகள் பெற்று முதல் ஆளாக காப்பாற்றப்படுவதை உறுதி செய்தார். டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க்கில் முத்துக்குமரனுக்கும் ராயனுக்கும் குறைவான வித்தியாசமே இருந்தது. இறுதிவாரத்திலும் அசால்ட்டாக இல்லாமல் பணப்பெட்டியை எடுக்க முதல் ஆளாக களமிறங்கினார். பிஆர் வேலையில் முத்துக்குமரனின் பெயர் டேமேஜ் ஆனாலும் அது அவருடைய வெற்றியை பெருமளவில் பாதிக்கவில்லை என்றே சொல்லலாம். ராயல் என்ஃபீல்ட் வண்டியையும் டாஸ்க்கில் வென்றார். இந்த நிலையில் முத்துக்குமரன் 8வது சீசனின் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். அவருக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

சவுண்ட் சவுந்தர்யா இரண்டாமிடம் பெற்றதாக பிக்பாஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக்பாஸ் அப்டேட்களுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP