பிக்பாஸ் வீட்டில் கண் கலங்கிய சவுண்ட் சவுந்தர்யா; நாமினேஷனில் சக போட்டியாளர்கள் ஓபன் அட்டாக்

பிக்பாஸ் தமிழ் நாமினேஷனில் சவுண்ட் சவுந்தர்யா மீது பிஆர் குற்றச்சாட்டு வைத்து சக போட்டியாளர்கள் அட்டாக் செய்தனர். இதையடுத்து சவுண்ட் சவுந்தர்யா தீபக் மற்றும் ராயனிடம் அழுது புலம்பினார்.
image

பிக்பாஸ் தமிழ் 8வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 14வது வாரத்தில் ராணவ், மஞ்சரியின் டபுள் எவிக்‌ஷனுக்கு பிறகு 8 பேர் போட்டியில் தொடர்கின்றனர். ராயன் டிக்கெட் டூ ஃபைனல் வென்று அதை விஜய் சேதுபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். எனவே இந்த வார நாமினேஷனில் ராயன் இல்லை. ஜனவரி 6ஆம் தேதி முதல் ப்ரோமோவின்படி ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது. இதில் முத்துக்குமரன், பவித்ரா, ஜாக்குலின் ஆகியோர் சவுண்ட் சவுந்தர்யாவை நாமினேட் செய்கின்றனர். சீசன் முடிவதற்கு 2 வாரங்களே உள்ளதால் இந்த வார எவிக்‌ஷனுக்கு ராயனை தவிர பிற போட்டியாளர்கள் அனைவரும் நாமினேட் ஆகினர்.

சவுந்தர்யாவின் பிஆர் வேலை

பிக்பாஸ் 8 சீசன் ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே சமூக வலைதளங்களில் சவுண்ட் சவுந்தர்யாவின் பெயர் கவனம் பெற்றது. இதற்கு முன்பாக சவுண்ட் சவுந்தர்யா பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று இருந்தாலும் பெயரளவிலேயே அறியப்பட்டார். நாட்கள் செல்ல வீட்டிற்குள் சவுந்தர்யாவின் செயல்களை வெளியே சமூக வலைதளங்களில் நியாயப்படுத்த ஆரம்பித்தனர். வாழ்க்கை பயணம் குறித்து சவுந்தர்யா பேசுகையில் ஒரே போன் காலில் 17 லட்சம் ரூபாய் இழந்ததாக கூறினார். எந்த பின்புலமும் இன்றி மிகவும் சிரமப்படு இந்த இடத்திற்கு வந்ததாக மனமுடைந்து பேசினார். பணம் இழந்த விவகாரம் பற்றி முன்னாள் போட்டியாளர் சனம் ஷெட்டி கேள்வி எழுப்பி இருந்தார். உடனடியாக சவுந்தர்யா அளித்த புகாரின் விவரம் இணையத்தில் வெளியானது. அனுதாப ஓட்டுக்களை பெறுவதற்காக சவுந்தர்யா திட்டமிட்டு பிக்பாஸ் வீட்டில் பணம் இழந்த விஷயத்தை கூறினாரா ? சந்தேகம் எழுந்த சில மணி நேரங்களிலேயே புகார் விவரம் எப்படி வெளியே வந்தது ? போன்ற சர்ச்சைகள் வெடித்தன.

பிக்பாஸ் நாமினேஷனில் சவுந்தர்யா

சமூக வலைதளங்களில் சவுந்தர்யாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிஆர் டீம் இயங்கி கொண்டே இருப்பதாக முத்துக்குமரன் குற்றம்சாட்டுகிறார். பிஆர் டீம் சூப்பராக வேலை செய்து சவுந்தர்யாவை பற்றி நல்லதை மட்டுமே பிரதிபலித்து இருக்கின்றனர் என்பது பவித்ராவின் குற்றச்சாட்டு. சவுந்தர்யா செய்யும் தவறுகளைக் கடந்து சில விஷயங்கள் ப்ரோமோட் செய்யப்படுவதால் தவறுகள் மறைக்கப்படுவதாக ஜாக்குலின் கூறினார்.

நாமினேஷன் முடிந்த பிறகு கார்டன் ஏரியாவுக்கு சென்ற சவுந்தர்யா அங்கே அழுது புலம்புகிறார். வாழ்க்கையில் எப்படி மேலே வருவது என்று தனக்கு தெரியவில்லை எனவும் பிஆர் டீம் வைத்து மட்டுமே தான் இவ்வளது தூரம் பிக்பாஸ் வீட்டில் பயணித்து இருப்பது போல காண்பிக்க முயற்சிக்கின்றனர் என சவுண்ட் சவுந்தர்யா ராயன், தீபக்கிடம் கண் கலங்குகிறார்.

பிக்பாஸ் வீட்டில் யாருக்கு தான் பிஆர் டீம் இல்லை என ரசிகர்கள் நினைக்கின்றனர். பிக்பாஸ் அப்டேட்களுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP