பிக்பாஸ் எலினிமேஷன் : ராணவ், மஞ்சரிக்கு குட்பை; டிக்கெட் டூ ஃபைனல் ட்விஸ்ட்

பிக்பாஸ் தமிழ் 8 சீசனில் நான்காவது முறையாக டபுள் எவிக்‌ஷன் நடைபெற்றுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்கு ராணவ், மஞ்சரி டாடா காட்டி வெளியேறினர். டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க்கில் ராயன் அதிக புள்ளிகள் பெற்றிருந்தாலும் குறும்படம் காட்டி சில குளறுபடிகளை விஜய் சேதுபதி தீர்த்து வைக்க வாய்ப்புள்ளது.
image

பிக்பாஸ் தமிழ் 8வது சீசன் 90 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் முழுக்க டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க் நடைபெற்றது. ஓபன் நாமினேஷனில் முத்துக்குமரன், சவுண்ட் சவுந்தர்யா தப்பினர். மீதம் இருந்த 8 போட்டியாளர்களும் எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டனர். டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க்கை வெல்லும் போட்டியாளருக்கு எவிக்‌ஷனில் இருந்து தப்பி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் கிடைத்தது. 4வது முறையாக இந்த சீசனில் டபுள் எவிக்‌ஷன் நடைபெற்று ராணவ், மஞ்சரி வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஏற்கெனவே சாச்சனா - ஆனந்தி, தர்ஷிகா - சத்யா, ஜெஃப்ரி - அன்ஷிதா அடுத்தடுத்த வாரங்களில் டபுள் எவிக்‌ஷன் செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் ராணவ் - மஞ்சரி எலிமினேட் செய்யப்பட்டனர்

பிக்பாஸ் எலிமினேஷன் : ராணவ், மஞ்சரி

பிக்பாஸ் வட்டார தகவலின்படி சனிக்கிழமை எபிசோடில் ராணவும், ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் மஞ்சரியும் எவிக்ட் செய்யப்பட்டு இருக்கின்றனர். இருவருமே வைல்ட் கார்டு போட்டியாளர்கள் ஆவர். தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் நாம் மஞ்சரியை பார்த்திருப்போம். அதே குரல் கர்ஜனையோடு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த மஞ்சரி முதல் வாரத்தில் முத்துக்குமரனுக்கு டஃப் கொடுத்தார். அடுத்தடுத்த வாரங்களில் ஜாக்குலின், சவுண்ட் சவுந்தர்யா ஆகியோருடன் மஞ்சரிக்கு மோதல் ஏற்பட்டது. டாஸ்க்கிலும் முடிந்தவரை முழு ஈடுபாடு காட்டினார். டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க்கில் வெள்ளிக்கிழமை ப்ரோமோவின் படி 13 புள்ளிகள் எடுத்திருந்தார். நாமினேஷில் பிற போட்டியாளர்களை விட குறைந்த வாக்குகள் பெற்ற காரணத்தால் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் ராணவ் எவிக்டட்

பிக்பாஸ் வீட்டில் முதல் இரண்டு வாரங்கள் பூனையாக இருந்த ராணவ் அதன் பிறகு ஜாக்குலின், சவுந்தர்யாவுடன் கடுமையான வார்த்தை மோதலில் ஈடுபட்டார். ராயனுடன் அடிதடி வரை சென்றது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக இடது கையை உடைத்து கொண்டார். அது உண்மை என்று கூட சக போட்டியாளர்களால் நம்பமுடியவில்லை. தான் நிறைய செலவு செய்திருப்பதாகவும் டைட்டில் வின்னர் ஆகும் வாய்ப்பு இருக்கிறது என்றும் பேசிக் கொண்டிருந்த ராணவ் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 8 முடிவதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. முத்துக்குமரன், தீபக், பவித்ரா, ராயன், ஜாக்குலின், சவுண்ட் சவுந்தர்யா, விஜே விஷால், அருண் ஆகியோர் போட்டியில் தொடர்கின்றனர்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP