பிக்பாஸ் வீசிய வலையில் சிக்கிய ஜாக்குலின்; பண பெட்டியை எடுக்க தவறியதால் எலிமினேஷன்

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனில் ஜாக்குலின் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக வரவில்லை, பண பெட்டியை எடுத்து வீட்டிற்கு திரும்பும் முயற்சியில் தோல்வியடைந்து வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டார்.
image

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனின் இறுதிப்போட்டிக்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. முந்தைய சீசன்கள் போல் இல்லாமல் இந்த முறை கடைசி இரண்டு வாரங்களில் எலிமினேட் ஆன போட்டியாளர்களை வீட்டிற்குள் அனுப்பி குட்டையை குழப்புவது, வாக்கெடுப்பு பற்றி உண்மைகளை பேசி டாப் 6 போட்டியாளர்களை பதற்றமடைய செய்வது போன்ற வேலைகள் பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்தன. ஒரு நபர் மட்டுமே டைட்டில் வின்னர் ஆக முடியும் என்பதால் மீதமுள்ள போட்டியாளர்கள் வெறும் கையோடு செல்லாமல் இருக்க பணப்பெட்டியுடன் வெளியேற வாய்ப்பு இருந்தது. இந்த முறை அதிலும் பிக்பாஸ் மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்தார். பணத் தொகையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து குறிப்பிட்ட தூரம் ஓடிச் சென்று அதை எடுத்து வர வேண்டும். கதவு மூடினால் நீங்கள் எலிமினேட் ஆனதாக அர்த்தம். இந்த நிலையில் பணப்பெட்டியை எடுக்க முயன்ற ஜாக்குலின் வீட்டிற்குள் திரும்ப முடியாமல் எலிமினேட் ஆனார்.

பிக்பாஸ் பண பெட்டி டாஸ்க்

இறுதிவாரத்தில் வாக்கெடுப்பு முறையில் மிட்-வீக் எவிக்‌ஷன் நடைபெறும் என போட்டியாளர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் பிக்பாஸ் பண பெட்டி டாஸ்க்கின் மூலமாக ஒருவரை வெளியேறலாம் என முடிவு செய்தது போல் தெரிந்தது. முதலில் முத்துக்குமரனுக்கு 60 மீட்டர் தூரத்தை 15 விநாடிகளுக்குள் அடைந்தால் 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. முத்துக்குமரன் 12-13 விநாடிகளில் வீட்டிற்குள் பணப்பெட்டியோடு திரும்பினார். அடுத்ததாக ராயன் 90 மீட்டர் தூரத்தை அடைந்தால் 2 லட்சம் ரூபாய் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. அவரும் வெற்றிகரமாக பணப்பெட்டியுடன் திரும்பினார்.

பிக்பாஸ் ஜாக்குலின் எலிமினேஷன்

ஓட்டப்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு இது சற்று எளிதாக தெரிந்திருக்கலாம். அடுத்ததாக பவித்ரா ஜனனி 2 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்து வீடு திரும்பினார். சவுந்தர்யா பாதி தூரத்திலேயே பயந்து போய் வீட்டிற்குள் திரும்பி வந்து தப்பித்து கொண்டார். இதையெல்லாம் கண்ட ஜாக்குலின் தன் பங்கிற்கு முயற்சி செய்ய வேண்டும் என பணப்பெட்டியை எடுக்கச் சென்று நேரத்திற்குள் திரும்ப முடியாமல் பிக்பாஸ் வீட்டின் கதவுகள் அடைக்கப்பட்டு எலிமினேட் செய்யப்படார்.

பிக்பாஸ் ஜாக்குலின்

இந்த சீசனின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவாரம் வரை ஜாக்குலின் எவிக்‌ஷனில் நீடித்து கொண்டே இருந்தார். ஒவ்வொரு வாரமும் ரசிகர்கள் அவரை காப்பாற்றி வந்தனர். ஆரம்பத்தில் சில பிரச்னைகளில் தேவையின்றி ஜாக்குலின் தலையிடுவது போல் இருந்தது, டாஸ்க்குகளில் முடிந்தவரை போராடினார். அவருடைய போராட்ட குணம் பாராட்டை பெற்றது. நட்பு வட்டாரத்தை விரிவுப்படுத்த முயற்சித்ததில் சறுக்கல்களை சந்தித்தார். வீட்டிற்குள் எல்லோரும் கேம் விளையாட வந்திருப்பார்கள். அவர்களிடம் உண்மையான நட்பு கிடைக்கும் என நினைப்பது தவறு. நண்பனாக நினைத்த சவுந்தர்யாவும் ஜாக்குலின் நடிப்பதாக கூறி ஏமாற்றம் தந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் வீசிய வலையில் சிக்கி எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்து எலிமினேட் ஆனார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP