பிக்பாஸில் துரோகத்தால் வீழ்ந்த தீபக்; எலிமினேஷனில் பிஆர் சதித்திட்ட வேலை

பிக்பாஸ் தமிழ் 8 சீசனில் இந்த வார டபுள் எவிக்‌ஷனில் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் தீபக் வெளியேற்றப்பட்டுள்ளார். டைட்டில் வின்னர் ஆவதற்கு அனைத்து தகுதியும் கொண்ட தீபக் பிஆர் வேலையினால் வீழ்த்தப்பட்டுள்ளார்.
image

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனின் இறுதிவாரத்திற்கு முத்துக்குமரன், ராயன், சவுண்ட் சவுந்தர்யா, விஜே விஷால், பவித்ரா, ஜாக்குலின் ஆகிய ஆறு போட்டியாளர்கள் அடியெடுத்து வைத்துள்ளனர். இந்த வார டபுள் எவிக்‌ஷனில் சனிக்கிழமை எபிசோடில் அருணும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் தீபக்கும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வார எவிக்‌ஷனில் குறைந்த வாக்குகளை அருண், பவித்ரா, ஜனனி ஆகியோர் பெற்றிருந்தனர். இதில் எப்படி தீபக் சிக்கினார் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. ஆரம்பம் முதல் கடுமையாக உழைத்த தீபக் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பது புரியாத புதிராக உள்ளது.

பிக்பாஸ் தீபக் எவிக்‌ஷன்

பிக்பாஸ் வீட்டில் தீபக்கின் ஆட்டத்தை பலரும் கவனிக்க தவறிவிட்டனர் என்றே சொல்லலாம். முதல் 20 நாட்கள் ஒவ்வொரு போட்டியாளரையும் கூர்ந்து கவனித்த பிறகு தனது ஆட்டத்தை தொடங்கினார் தீபக். கேப்டன்ஸியில் சிறப்பாக செயல்பட்டார். ஏஞ்சல் - டெவில் டாஸ்க்கில் அட்டகாசமாக விளையாடினார். வீட்டில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க தனது அனுபவத்தை பயன்படுத்தினார். நடிகர் ரஞ்சித்திற்கு கேப்டன் ஆகும் வாய்ப்பு கிடைக்க தீபக்கே காரணம். டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க்கில் கடுமையாக உழைத்தார். குடும்பத்தினரை சந்திக்கும் வாரத்தில் தீபக்கிற்கு அவரது மனைவியும், குழந்தையும் எனர்ஜி கொடுத்தனர். தீபக்கின் வெளியேற்றம் போட்டியை பார்க்காமலேயே பலர் வாக்களிக்கின்றனரா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

தீபக் எவிக்‌ஷன் பிஆர் வேலையா ?

இந்த சீசனை பொறுத்தவரையில் அனைத்து போட்டியாளர்களுக்கும் அவர்களுடைய தனிப்பட்ட பிஆர் டீம் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளது. சமூக வலைதள பக்கங்களில் முத்துக்குமரன், சவுண்ட் சவுந்தர்யா, ஜாக்குலின், விஜே விஷாலுக்கு பிக்பாஸ் ரசிகர்களை தவிர்த்து மறைமுக ஆதரவும் அதிகமாக இருந்தது. பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பாக குறிப்பிட்ட போட்டியாளர்கள் பக்காவாக பிஆர் டீம் செட் செய்து உள்ளே சென்றுள்ளனர். தீபக்கிற்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருந்தாலும் சமூக வலைதளங்களில் அவருக்கென தனி பிஅர் டீம் இல்லாதது போலவே தெரிந்தது. ஒரு வாரம் மட்டும் கெத்து தீபக் என டிரெண்ட் செய்தனர். இந்த சீசன் முழுவதும் முத்துக்குமரனை சுற்றி இயங்கியுள்ளது என்று சொல்லலாம். சவுண்ட் சவுந்தர்யா, ஜாக்குலின் செயல்களை நியாயப்படுத்த பிஆர் டீம் கடுமையாக வேலை செய்தது.

இதில் வியக்கதக்க விஷயம் என்னவென்றால் பவித்ரா, விஜே விஷாலை விட தீபக் குறைவான வாக்குகளை பெற்றார் என்பதே. முந்தைய சீசன்களிலும் நல்ல போட்டியாளர்கள் திடீரென எவிக்ட் செய்யப்பட்டு இருக்கின்றனர். உதாரணத்திற்கு தர்ஷன். இந்த சீசனில் அது போல தீபக்கிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP