பிக்பாஸ் எவிக்‌ஷன் : மூட்டை முடிச்சை கட்டிய அருண்; இந்த வாரமும் 2 எவிக்‌ஷன் ?

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனில் இந்த வார முதல் எவிக்‌ஷனில் அருண் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷனுக்கு வாய்ப்புள்ளது. பிக்பாஸ் வாக்கெடுப்பில் பவித்ரா, விஜே விஷால் கடைசி இடங்களில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
image

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனில் கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது. சீசன் முடிவதற்கு 10க்கும் குறைவான நாட்களே உள்ளன. இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன் நடைபெறவுள்ளது. பிக்பாஸ் வரலாற்றில் 8வது சீசனில் டபுள் எவிக்‌ஷன் அரங்கேறுவது ஐந்தாவது முறை. டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க்கில் ராயன் வென்ற காரணத்தால் முத்துக்குமரன், தீபக், பவித்ரா, ஜாக்குலின், சவுந்தர்யா, விஜே விஷால், அருண் ஆகிய 7 பேர் எவிக்‌ஷனுக்கு நாமினேட் ஆகியிருந்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை எபிசோடில் அருண் எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக பிக்பாஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை எவிக்‌ஷனிலும் ஆண் போட்டியாளர் வெளியேற்றப்பட இருக்கிறார்.

பிக்பாஸ் அருண் எலிமினேட்

பிக்பாஸ் வீட்டிற்குள் அருண் காலடி வைத்த போது முதல் மூன்று வாரங்களுக்கு குழப்பமான போட்டியாளராக தெரிந்தார். பிறர் சொல்வதை பாதி பாதியாக புரிந்து கொண்டு கேலி கிண்டலுக்கு ஆளானார். இதை பார்த்த பிக்பாஸ் ரசிகர்களும் அருண் வெள்ளந்தி மனம் படைத்தவர் என நம்பினர். ஆனால் அதன் பிறகு முத்துக்குமரன், மஞ்சரி ஆகியோருடன் தொடர்ந்து மோதினார். ஒரு கட்டத்தில் மாக்கிங் அருண் என அழைக்கப்பட்டார். வீட்டில் கவனம் பெறுவதற்கு அருண் தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது போல் போட்டியாளர்களுக்கு தெரிந்தது.

பிக்பாஸில் அருண் எவிக்டட்

தொழிலாளர் டாஸ்க்கில் முத்துக்குமரனுடன் மோதி வருத்தம் அடைந்தார். விஜய் சேதுபதியுடனான உரையாடலிலும் அருணுக்கு தெளிவு கிடைக்கவில்லை. இதன் காரணமாக இடைவேளை நேரத்தில் விஜய் சேதுபதி பிக்பாஸ் மைக்கில் அருணுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலை உண்டானது. இதையடுத்து குடும்பத்தினருடனான சந்திப்பின் போது முத்துக்குமரன் தனது சொந்தம் என அருணுக்கு தெரியவந்தது. இதையடுத்து முத்துக்குமரனுடன் சமரசம் உண்டானது. அதற்கு அடுத்த வாரம் அருணின் காதலியான முன்னாள் பிக்பாஸ் வின்னர் அர்ச்சனா உள்ளே வந்து சில அறிவுரைகளை வழங்கிய பிறகு மேலும் அமைதியானார்.

கடைசி 20 நாட்களில் போட்டியில் இருந்து அருணின் கவனம் விலகியது போல் தெரிந்தது. 40-60 இடைப்பட்ட நாட்களில் டப்பா அருண் என்றெல்லாம் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். தற்போது அவையெல்லாம் குறைந்து அருணுக்கு ஓரளவு நற்பெயர் கிடைத்துள்ளது. இன்னும் ஒரு எவிக்‌ஷன் இந்த வாரத்திற்கு பாக்கி உள்ளது. யார் அந்த மற்றொரு ஆண் போட்டியாளர் என்பதை விரைவில் பார்க்கலாம்.

பிக்பாஸ் அப்டேட்களுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP