விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டு காலமாக பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமின்றி ஹிந்தி, மலையலாம், கன்னடா, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஏற்கனவே 7 சீசன் கடந்த நிலையில் தற்போது 8 வது சீசனில் ரசிகர்களுக்கு பல ட்விஸ்ட் காத்திருக்கு என்று தான் கூறவேண்டும். கடந்த 6 சீசன் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக பிக் பாஸ் அல்டிமேட் சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் 8 சீசன் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ரோஷினி ஹரிபிரியன்:
ரோஷினி என்றழைக்கப்படும் ரோஷினி ஹரிப்ரியன், தமிழ்த் திரைப்படங்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த ஒரு திறமையான நடிகை. பாரதி கண்ணம்மா என்ற பிரபலமான தொலைக்காட்சித் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானார். 2022 ஆம் ஆண்டில், ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சியான குக்கு வித் கோமாலியில் தனது சமையல் திறமைகளை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது நடிகை ரோஷினி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
ரித்திகா:
ரித்திகா தமிழ் செல்வி, ஒரு திறமையான தமிழ் தொலைக்காட்சி நடிகை, தமிழ் சீரியல்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். பிரபலமான நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியான குக்கு வித் கோமாலி மற்றும் நகைச்சுவை ரியாலிட்டி ஷோ காமெடி ராஜா கலக்கல் ராணி ஆகியவற்றில் பங்கேற்று அவர் மிகவும் பிரபலமானார்.
விஜே விஷால்:
விஜே விஷால், ஒரு திறமையான தமிழ் தொலைக்காட்சி நடிகர். இவர் 2020 ஆம் ஆண்டு பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமாகி பிறகு குக்கு வித் கோமாலி நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார் விஜே விஷால்.
அக்ஷிதா அசோக்:
அக்ஷிதா அசோக் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி 2 சீரியல் மற்றும் சாக்லேட் ஆகிய சீரியலில் நடித்ததற்காக அறியப்பட்ட நடிகை ஆவார். இதற்கு பிறகு இவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
திவ்யா துரைசாமி:
சமீபத்தில் வெளியான வாழை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள திவ்யா துரைசாமி ஒரு நடிகை மற்றும் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான இஸ்பேத் ராஜாவும் இதய ராணியும் என்ற தமிழ் திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். பிரபலமான சமையல் நிகழ்ச்சியான குக்கு வித் கோமாலியில் பங்கேற்று பிரபலமாகி உள்ளார்.
ஷாலின் ஜோயா:
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை ஷாலின் ஜோயா. ஷாலின் ஜோயா ஒரு இந்திய நடிகை, நடனக் கலைஞர் மற்றும் இயக்குனர் ஆவார். சமீபத்தில் வெளியான கண்ணகி திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இதற்கு பிறகு இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
சம்யுக்தா விஸ்வநாதன்:
சம்யுக்தா விஸ்வநாதன் ஒரு நடிகை, நடனக் கலைஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். 2021 ஆம் ஆண்டு வெளியான ஓ மனப்பென்னே, ஜாக்சன் துரை: தி செகண்ட் அத்தியாயம் மற்றும் சமீபத்தில் வெளியான சாரி 111 ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார்.
அமலா ஷாஜி:
அமலா ஷாஜி ஒரு சமூக வலைதள பிரபலம். அவர் சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் மூலம் பிரபலமானார். இந்த தளங்களில் அவருக்கு ஏராளமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். தற்போது அமலா ஷாஜி இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation