இருதய நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு நாம் சில உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொண்டால் மட்டும் போதாது. அவற்றை நாள்தோறும் கடைபிடிக்க வேண்டும். இது நம்முடைய நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க: Benefits of almonds: சருமத்தை பொலிவாக்கும்; எலும்புகளை வலுப்படுத்தும் - ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்
இதனை எப்படி மேற்கொள்வது என்ற குழப்பம் பலருக்கு இருக்கலாம். இதற்காக மிக கடினமான விஷயங்களை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில எளிய மாற்றங்கள் கூட பெரிய தாக்கத்தை நமக்கு ஏற்படுத்து. அதன்படி, நாம் செயல்படுத்தக் கூடிய சில மாற்றங்களை தற்போது காண்போம்.
அனைத்து கொழுப்புகளும் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை அல்ல. ஆலிவ் எண்ணெய், பாதாம் பருப்பு, விதைகள் மற்றும் வெண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகள் அழற்சியை குறைக்க உதவுகின்றன. அதே நேரத்தில், பொரித்த உணவுகள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது அவசியம். ஏனெனில், அவை நாளடைவில் இருதய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், மற்றும் மீன், கோழி போன்ற புரத உணவுகள் ஆகியவற்றை கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள். இவை உங்கள் இருதயத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. சர்க்கரை, ட்ரான்ஸ் கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பதன் மூலம் கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தலாம். உங்கள் உணவுமுறையில் மாற்றங்களை செய்வது நீண்ட கால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க: Fatty liver: கல்லீரல் பாதிப்புக்கு இதுதான் முக்கிய காரணம்: நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல் இதோ
அதிக உப்பு உட்கொள்வது இரத்த அழுத்த உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாகும். எனவே, சிறிய அளவில் உப்பை குறைப்பதன் மூலம்கூட இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும். இதை செயல்படுத்துவதற்கு ஆரம்பத்தில் கடினமாக தோன்றலாம். ஆனால், அதற்கு மாற்றான வழிகளைக் கண்டறிந்து சாப்பிடுவதன் மூலம் இதனை சாத்தியப்படுத்த முடியும்.
இருதயம் புத்துணர்ச்சி பெற தினமும் 7 முதல் 9 மணிநேரம் தூக்கம் அவசியம். தூக்கமின்மை உடல் எடை அதிகரிப்பு, இரத்த அழுத்த உயர்வு மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கும். நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வதும் முக்கியம் ஆகும். இது சோர்வை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நீண்டகால மன அழுத்தம், இரத்த அழுத்தத்தை உயர்த்தி இருதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். தியானம், யோகா அல்லது ஆழ்ந்த சுவாச பயிற்சி போன்றவற்றை தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் செய்வது கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மன அழுத்தம் இல்லாமல் இருப்பது தூக்கம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது.
இது போன்ற எளிய முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மாரடைப்பு அபாயத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். அதற்கான முயற்சிகளை சரியான முறையில் தொடங்க வேண்டும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com