
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பாரதி கண்ணம்மா சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இந்த தொடர் மூலம் பல புதுமுகங்கள் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள். நடிகை ரோஷினி ஹரிப்ரியன், நடிகர் அருண் இதில் லீட் ரோலில் நடித்தனர். இந்த ஜோடியை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. அதனால் சீரியலும் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்தது. பாரதி, கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பிய எபிசோடுகள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தன. அதே போல் இதில் அகிலன் - அஞ்சலி ரோலில் நடித்த அகிலன் புஷ்பராஜ் - கண்மணிக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
பாரதி கண்ணம்மா சீரியலிலும் இவர்கள் ட்ராக்குக்கு தனி முக்கியத்தும் கொடுக்கப்பட்டு சீரியல் பயணித்து கொண்டிருந்தது.இந்நிலையில் தான் சீரியலில் இருந்து நடிகர், நடிகைகள் திடீரென்று வெளியேறினர். கண்ணம்மாவாக நடித்த ரோஷினி, அஞ்சலியாக நடித்த கண்மணி, அகிலன் என எல்லோரும் வெளியேற சீரியலை விரும்பி பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. இதில் இருந்து வெளியேறிய கண்மணி ஜீ தமிழ் சீரியலில் கமிட்டாகி லீட் ரோலில் நடிக்க தொடங்கினார். அகிலன் ரோலில் நடித்த அகிலன் புஷ்பராஜூக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.
வெள்ளித்திரையில் தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார் அகிலன். தற்போது வெப் சீரிஸிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அகிலனுக்கு நேற்றைய தினம் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தனது நீண்ட நாள் காதலியை மணந்துள்ளார் அகிலன் புஷ்பராஜ். தனது காதலியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள், திருமண புகைப்படங்கள் ஆகியவற்றை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து, அழகான கேப்ஷனும் தந்துள்ளார்.

அகிலன் தனது இன்ஸ்டா போஸ்டில் “இனி என்றென்றும் உன்னுடன்’ புது வாழ்க்கை ஆரம்பம், என குறிப்பிட்டு திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அகிலனுக்கு தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதுப்போன்ற சினிமா பதிவுகளுக்கு மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com