
தமிழ் மாதங்களில் வழிபாட்டிற்கு உரிய மாதமாக உள்ளது மார்கழி. மற்ற மாதங்களைக் காட்டிலும் இந்த மாதத்தில் அதிகாலை எழுந்து வழிபாடு மேற்கொள்ளும் வழக்கத்தை மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இப்படி செய்தால் என்னென்ன நன்மைகள்? என்னென்ன விஷயங்களையெல்லாம் பெண்கள் மார்கழியில் செய்ய வேண்டும்? என்பது குறித்த ஆன்மீக தகவல்கள் இங்கே.
ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல நன்மைகளைக் கொண்ட மாதமாக உள்ளது மார்கழி. ஆன்மீக ரீதியாக பார்த்தோம் என்றால், சூரிய பகவான், குரு பகவான் வீட்டில் சஞ்சரிக்கும் காலம் என்பதோடு தேவர்கள் கண் விழித்து மக்களுக்குத் தேவையான நன்மைகளை அளிக்கும் மாதமாகவும் உள்ளது என்ற நம்பிக்கை உள்ளது. அதிலும் பிரம்ம முகூர்த்த நேரமாக காலை 4 முதல் 6 மணி வரை தலைக்குளித்து விட்டு இறைவழிபாட்டில் ஈடுபடும் போது மன நிம்மதியை அடைகிறார்கள்.
மேலும் படிக்க: Margazhi Month Kolam: மார்கழி மாதம் பிறந்தாச்சு; பெண்கள் முதல் நாளிலிருந்து என்னென்ன கோலங்கள் போடலாம் தெரியுமா?
அறிவியல் ரீதியாக பார்த்தோம் என்றால் மற்ற மாதங்களை விட மார்கழி மாதத்தில் ஓசோன் மண்டலம் பூமிக்கு மிக அருகில் வரக்கூடும். மாசு இல்லாத நல்ல ஆக்ஸிஜன் கிடைக்கும் என்பதால் இந்த மாதத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் அதிகாலை எழுந்து குளித்து விட்டு வழிபாடு மேற்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். இதுபோன்று மார்கழி மாதத்தில் 30 நாட்களும் அதிகாலை எழுத்து குளித்துவிட்டு விளக்கேற்றி வழிபடும் போது நினைத்த காரியங்கள் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
மேலும் படிக்க: மார்கழி மாதத்தில் எதை செய்யணும் ? செய்யக் கூடாது என தெரிஞ்சுகோங்க
மார்கழி மாதம் என்றாலே கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு அதிகளவில் இருக்கும். இதற்காக நினைத்த நேரத்தில் கோவிலுக்குச் செல்லக்கூடாது. பிரம்ம முகூர்த்த வேளையான காலை 4 முதல் 6 மணிக்குள் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவில்களுக்குச் செல்ல வேண்டும். முன்னதாக வீட்டில் செல்வ செழிப்பு பெருகுதற்கு பூ கோலங்கள், ரங்கோலி, வண்ண கோலங்கள் என ஒவ்வொரு நாளும் விதவிதமாக கோலங்கள் இட வேண்டும்.
மேலும் படிக்க: Margazhi month 2023: மார்கழி மாதத்திற்கும் அறிவியலுக்கும் இத்தனைத் தொடர்புகளா?
பெண்கள் கோவிலுக்குச் சென்றுவிட்டு வந்த பின்னதாக அல்லது கோவிலுக்கு செல்வதற்க முன்னதாக நிலை வாசலுக்கு முன்புறம் ஒரு அகல் விளக்கேற்றி வைக்க வேண்டும். வாசலில் மட்டுமல்ல பூஜை அறையிலும் விளக்கேற்ற வேண்டும். இவ்வாறு வழிபாடுகள் மேற்கொள்ளும் போது பூலோகத்தில் உள்ள தேவர்கள் மன மகிழ்ச்சி அடைவார்கள். இதன் பலனாய் பெண்கள் என்ன நினைக்கிறீர்களோ? அந்த காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறக்கூடும். மார்கழி மாதத்தில் 30 நாட்களும் அதிகாலை எழுந்து நீராடி திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடும் போது ஓராண்டிற்கான அனைத்து நன்மைகளையும் பெற முடியும் என்ற நம்பிக்கையை ஆன்மீக வாதிகள் கொண்டுள்ளனர்.
Image source - Freepi
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com