herzindagi
image

Padi Kolam Design: மார்கழி மாதத்தை அழகுபடுத்தும் சூப்பரான 5 படிக்கோலம்

கோலம் வீட்டு வாசலை அழகுபடுத்துகிறது, குறிப்பாக மார்கழி மாதம் கோலம் மிக தனித்துவம் பெற்றது. அதிலும் பல சிக்கலும், கடினமும் நிறைந்த படி கோலத்தை இந்த மார்கழி மாத்தில் வீட்டு வாசலில் போட்டு அழகுபடுத்தலாம்.
Editorial
Updated:- 2025-01-03, 01:22 IST

மார்கழி மாதத்தில் பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு சாணம் வைத்து அதன் மீது பூசனி பூக்கள் வைத்து அலங்காரம் செய்வர். இந்த கோலங்களில் வைக்கும் சாணங்களை உலரவைத்து தைப்பூசத்தன்று சிறுவீட்டுப் பொங்கல் வைக்க எரிபொருளாக மக்கள் பயன்படுத்துவார்கள். மார்கழி மாதம் கோலம் என்பது இதில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. மார்கழி மாதம் தொடங்கி தை மாத பொங்கல் வரை வீட்டு வாசலில் கோலங்கள் அலங்கரிக்கச் செய்கிறது. இந்த நாட்களில் பல  வகையான கோலங்கள் வண்ணமயமாகப் போடப்படுகிறது. இதில் மிகவும் பாரம்பரியமாகப் போடப்படும் படி கோலங்களில் சில வகைகளைப் பார்க்கலாம். 

 

மேலும் படிக்க: புத்தாண்டை இனிதே வரவேற்கப் பாரம்பரியத்தை வெளிப்பதும் தமிழ் ரங்கோலி கோலங்கள்

மார்கழி மாதம் படி கோலம்

 

வீட்டு வாசலை அழகுபடுத்தும் மார்கழி மாத படிக்கோலங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

 

பூக்கள் கொண்ட படி கோலம்

 

இந்த மடி கோலத்திற்கு அடுக்குகள் வைத்து 8 இதழ்களைக் கொண்ட பூக்களைப் போடவும். இப்போதெல்லாம் பூ அடுக்குகள் வரையக் கோலம் போடும் அச்சுகள் வந்துவிட்டது. இந்த அச்சுகளை வைத்து அடுக்கு பூக்களை எளிதாக வரையலாம். இந்த பூக்கள் வரைந்த பிறகு மையப்பகுதிகளைப் பார்த்தால் அழகிய நட்சத்திர வடிவத்தைப் பார்க்கலாம். பூக்களில் காளியாக இருக்கும் மையப்பகுதியைக் காவி நிறத்தை இட்டு அழகுபடுத்தலாம், மேல் பகுதியில் பச்சை மற்றும் நில நிறத்தை இட்டு மேலும் அழகைச் சேர்க்கலாம். பூக்களின் மேல் பகுதியில் படி தாமரை வரைந்து முழுமைப்படுத்தலாம்.

kambi kolam

Image Credit: pinterest


3டி வடிவத்தில் படி கோலம்

 

8 கட்டங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து அடுக்குகள் போல் வரையப்படும் அழகிய படி கோலம். வட்டத்தில் இரண்டு அடுக்குளில் மாறுபட்ட வண்ணங்களை நிரப்பவும். வண்ணங்களுக்கு மேல் மாறுபட்ட நிறத்தை வைத்து கோலத்தை மேலும் அழகுபடுத்தவும். வட்டத்தின் மேல் பகுதியில் மாங்காய் வடிவத்தை வரைந்து கோலத்தை முழுமைப்படுத்தலாம். வீட்டு வாசலில் இந்த படி கோலம் கண்டிப்பாக லட்சுமி கடாட்சத்தைக் கொண்டு வரும்.

kambi kolam 1

Image Credit: pinterest

மயில் படிக்கோலம்

 

மயில் படிக்கோலம் வீட்டு வாசலை ஆன்மீக ரீதியாக அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும். மையப்பகுதியில் காற்றாடி வடிவத்தில் படி கோலத்தை அழகுப்படுத்தவும். காற்றாடி வடிவத்தின் மேல் கோபுர வடிவத்தைக் கொடுத்த, அதிலிருந்து மயிலி கழுத்து மற்றும் மூக்கு பகுதிகளை வடிவமைக்கவும். இந்த கோலத்தில் பிடித்த வண்ணத்தை இட்டு மேலும் அழகுப்படுத்தலாம்.

kambi kolam 2

 Image Credit: pinterest


சதுர வடிவ படிக்கோலம்



சதுர வடிவத்தைப் போட்டு, அதன் மேல் முக்கோணம் வடிவத்தை வரையவும். இதில் பல படிகளை வரைந்துகொள்ளலாம். சதுரம் மற்றும் முக்கோணம் இரண்டிற்கும் நடுவில் பெரிய மொட்டுடன் தாமரை மலர்களை வரைந்துகொள்ளவும். மையப்பகுதியில் இருக்கும் தாமரை மொட்டில் கம்பி போன்ற நீட்டு வடிவமும், மறுபுறம் புள்ளிகளை வைத்து அழகுபடுத்தவும்.

kambi kolam 3

 Image Credit: pinterest


சதுர வடிவ லிங்கம் படிக்கோலம்

பெரிய சதுரம் வரைந்து, அதனை பிரித்துச் சிறு சிறு சதுரங்களைப் பிரித்து எடுத்துக்கொள்ளவும். ஒரு சதுரங்கத்தில் குட்டி குட்டி கட்டங்களும், அடுத்த சதுரங்கத்தில் காவி நிறத்தையும் பூசி அழகுபடுத்தலாம். சதுரங்கத்தின் நான்கு புறத்திலும் லிங்க வடிவத்தை வரைந்து காவி நிறம் மற்றும் கம்பி வடிவத்தை வரையலாம். அதன்பிறகு இரண்டு லிங்கத்தின் மையப்பகுதியில் மொட்டு வடிவத்தைக் கொடுத்து முழுமைப்படுத்தவும்.

kambi kolam 4

 Image Credit: pinterest


மேலும் படிக்க: 7 புள்ளிகள் கொண்டு எளிமையாகப் போடப்படும் மார்கழி மாத சிக்கு கோலங்கள்

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com