இந்து மதத்தில் எந்தவொரு சுப நிகழ்வாக இருந்தாலும் அதில் பல நம்பிக்கைகளும் சடங்குகளும் பின்னி பிணைந்து இருக்கும். அப்படி இரு மனம் இணையும் திருமணத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை பல நம்பிக்கைகளும் சடங்குகளும் உள்ளடக்கியதாக இருக்கும். வீட்டில் திருமண பேச்சு அடிபடுகிறது என்றால் முதலில் ஜாதகத்தில் இருந்தே தொடங்கும். திருமணம் செய்ய போகும் ஆணின் ஜாதகத்தையும் பெண்ணின் ஜாதகத்தையும் ஒப்பிட்டு பத்து பொருத்தமும் சரியாக இருக்கிறதா என பெரியவர்கள் பார்ப்பார்கள்.
திருமணத்தில் பத்து பொருத்தம் என்பது மன புரிதல், ஒற்றுமை, மகிழ்ச்சி, தாம்பத்திய உறவு, குழந்தை பாக்கியம், சுபிட்சமான எதிர்காலம் என்பன அமையுமா ? என்பதற்காக பார்க்கப்படுகிறது. இதற்கு இருவருடைய ஜாதகங்களிலும் உள்ள பிறந்த நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் ஆதிக்கம் ஆகியவற்றை கிரக தோஷங்களோ பார்த்து கணிக்கப்படும்.
தினப்பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திர பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசியப் பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், வேதைப் பொருத்தம்.
தினப் பொருத்தம் என்பது நட்சத்திர பொருத்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆண், பெண் இருவரின் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்ள பார்க்கப்படும் பொருத்தமாகும். பெண் நட்சத்திரத்தில் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் போது 2,4,6,8,9,11,13,15,18,20,24,26 இதில் ஏதேனும் ஒரு தொகை வந்தால் தினப் பொருத்தம் உண்டு.
ஒருவரின் குணத்தை பற்றி தெரிந்து கொள்ள கணப் பொருத்தம் பார்க்க வேண்டும். இதில் தேவ கணம், மனித கணம், ராட்சஷ கணம் என மூன்று கணங்கள் இருக்கின்றன. தேவ அல்லது மனித கணம் இருப்பின் திருமணம் செய்யலாம். இரண்டு நட்சத்திரங்களும் ராட்சஷ கணமாக இருந்தால் பொருத்தம் இல்லை.
மேலும் படிக்க: பூப்பெய்திய நேரம்! ருது ஜாதகம் எழுதி திருமண பொருத்தம் பார்க்கலாமா? அவசியமா?
மகேந்திர பொருத்தம் என்பது புத்திர பாக்கியத்திற்காக பார்க்கப்படுகிறது. பெண் நட்சத்திரத்தில் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் 4,7,10,13,16,22,25 இதில் ஏதேனும் ஒரு தொகை வர வேண்டும்.
திருமணம் செய்யும் இருவரும் செல்வ செழிப்பாக வாழ்வார்களா என்பதை அறிவதே ஸ்திரி தீர்க்கப் பொருத்தம். பெண் நட்சத்திரம் இருந்து ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் போது தொகை 13க்கு மேலே என்றால் சுபம்.
பத்து பொருத்தங்களில் மிக முக்கிய பொருத்தமாக யோனிப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. ஏனெனில் கணவன்-மனைவி இடையிலான பாலியல் ஈர்ப்பு தொடர்பான விஷயங்களைக் யோனிப் பொருத்தம் கணிக்கிறது.
வாழையடி வாழையாக வம்சம் தழைக்குமா என்பதை அறிய ராசிப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. பெண் ராசி இருந்து தொடங்கி ஆண் ராசி வரை எண்ணுகையில் 2,4,6,8,12 என தொகை வந்தால் ராசி பொருத்தம் இல்லை.
திருமண பொருத்தம் பார்க்கும்போது மணமகன் மற்றும் மணமகள் இருவரின் ராசிக்கு அதிபதியாக இருக்கும் கிரகங்கள் நட்பு கிரகங்களாக இருந்தால் இருவரும் ஒற்றுமையாக இருப்பார்கள்.
இருவருக்கும் ஒருவருக்கொருவர் அன்யோன்யம் இருக்குமா ? இல்லையா என பார்ப்பதற்கு வசியப் பொருத்தம். இப்படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குறிப்பிட்ட ராசி வசிய பொருத்தமாக இருக்கும்.
பெண் வீட்டார் முக்கியமாக பார்க்கும் பொருத்தமாக ரஜ்ஜு பொருத்தம் உள்ளது. ஒன்பது பொருத்தங்களும் இருந்து ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில் ரஜ்ஜு பொருத்தம் பெண்களின் மாங்கல்ய பாக்கியத்தை குறிக்கிறது.
மேலும் படிக்க: திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் அவசியமா? ரஜ்ஜு பொருத்தம் முக்கியமா?
தம்பதியினர் வாழ்க்கையில் இன்ப, துன்பங்கள் எவ்வாறு அமையும் என்பதை கணிக்கிறது வேதைப் பொருத்தம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com