மார்கழி மாதம் வீட்டு வாசலில் கம்பி கோலம் போடுவதின் முக்கியத்துவம்

மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி வாசலில் வண்ண வண்ண கோலங்கள் போட்டு, இறைவனுக்கு விளக்கேற்றி திருப்பாவை பாடி தன் மனதிற்குப் பிடித்தவரைக் கணவனாக கரம்பிடித் ஆண்டாளையும், திருமாலையும் போற்றி வழிபடும் புண்ணிய மாதம்தான் மார்கழி.
image

மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டும் ஆலயங்களுக்குச் செல்வர்.

மார்கழியில் அதிகாலையில் கோலம் போடுவதின் முக்கியத்துவம்

பொதுவாகவே வீதியில் கோலம் போடுவது என்பது ஆன்மிக ரீதியாக லட்சுமி தேவியை வீட்டிற்குள் அழைத்து வருவதற்குத் தினமும் காலையில் கோலம் போட வேண்டும் என்று சொல்வார்கள். இப்பழக்கத்தை இந்துக்கள் காலங்காலமாக கடைப்பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். கோலம் இறை வழிப்பாட்டிற்கு மிகவும் முக்கியதும் பெற்றதாகக் கூறப்படுகிறது. பொதுவாகவே அனைத்து விசேஷ நாட்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் வீட்டு வாசலில் அழகிய கோலம் போடுவது வழக்கத்தில் இருக்கின்றது. ஆனால், இந்த கோலம் போடுவதிலும் மார்கழி மாதத்தில் மட்டும் வழக்கத்தைக் காட்டிலும் அதிகாலை எழுந்து கொட்டும் பனியில் கோலம் போடுவதால், மார்கழி பனிக் காற்று நம்மேல் பட்டு அந்நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்போம் என்று சொல்லப்படுகிறது.

sikku kolam

Image Credit:pinterest


இது தவிர மார்கழி மாதத்தில் அரிசி மாவில் கோலம் போடுவதன் மூலம் எறும்புகளுக்கு உணவு கிடைத்து. இதனால் பெண்கள் தெரியாமல் எறும்பு மிதித்து இறப்பதால் ஏற்படும் தோஷமானது இந்த மாவை வந்து உண்பதால் நீங்குவதாக நம்பிக்கை.

மார்கழி மாத கம்பி கோலம் முக்கியத்துவம்

மார்கழி மாதம் கோலம் மிகவும் ஸ்பெஷலானது. வீடுகளில் பெரிய கம்பி கோலங்கள் இடுவார்கள். புகழ் பெற்ற கம்பி கோலம் போடுவது சற்று கடினமான ஒன்றாகும், இந்த மார்கழி மாத குளிர் வேலையில் கம்பி கோலம் போடுவதால் பெண்களின் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. கம்பி கோலம் போடும் பெண்கள் தெளிவாக, அறிவாற்றலுடன் செயல்படுவார்கள் என்று சொல்லுவார்கள். பெண்கள் இந்த மார்கழி மாதத்தில் கம்பி கோலம் போடு , உங்கள் உடல் ஆற்றலையும், நினைவாற்றலையும் மேம்படுத்திக்கொள்ளுங்கள்.

sikku kolam 1Image Credit:pinterest


மேலும் படிக்க: தீபாவளிக்கு வீட்டு வாசலை அலங்கரிக்கும் பிரமாண்ட ரங்கோலிகள்

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP