ராகுவை போல கொடுப்பானும் இல்லை கேதுவை போல கெடுப்பானும் இல்லை என்பார்கள். ராகு கொடை வள்ளல், கேது கெடுதல் செய்பவர் என அர்த்தமல்ல. கேது இருந்தால் ஞானம் விருத்தி பெற்றவர். எனவே கேதுவை போல் கிடைப்பான் இல்லை என கருதுங்கள். ராகு - கேது பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களை பெற போகிறீர்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ராகு கேது பெயர்ச்சி 2025
மேஷம்
12ஆம் இடத்தில் சஞ்சரித்த ராகு இப்போது லாப ஸ்தானத்திற்கு வருகிறார். லாபஸ்தானத்தில் ராகு இருப்பதனால் பண புழக்கம் நன்றாக இருக்கும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். எடுத்த முயற்சிகள் கைகூடும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். சுப செலவுகள் குழந்தைகளின் வழியில் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10ஆம் இடத்திற்கு ராகு வருகிறார். இதனால் தொழில் வளம் சிறக்கும், தடைபட்ட தொழிலை மீண்டும் தொடங்குவீர்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு அச்சுறுத்தல் வரலாம். பணியில் உயர் பதவி கிடைப்பதற்கான அறிகுறி உண்டு.
மிதுனம்
9ஆம் இடத்தில் ராகு இருக்கிறார். பொருளாதாரத்தில் நிறைவான நிலையை அடைவீர்கள், இடமாற்றம் உண்டு. வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் காணப்போகிறீர்கள். முன்னோர் வழியில் சொத்து கிடைக்கும். பணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தால் மீண்டும் சேர்வதற்கான வாய்ப்பை பெறலாம்.
கடகம்
அஷ்டம சனி நேரத்தில் ராகுவும் வருகிறார். இருப்பினும் அச்சம் இல்லாத வாழ்க்கை அமையும். தடையாக இருந்த காரியங்கள் தானாக நடக்கும். உங்களுடைய கைகளில் பணம் புரளும்.
சிம்மம்
குடும்பத்தில் பிரச்னைகள் அதிகரிக்கலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. எந்தவொரு காரியத்தையும் யோசித்து செய்ய வேண்டும். தொழில் மாற்றம் ஏற்படலாம். தஞ்சை பெரிய கோவிலில் வழிபட்டு எதிர்காலத்தைச் சிறப்பாக்கிடுங்கள்.
கன்னி
கேது 12ஆம் இடத்திற்கு செல்கிறார். இதனால் மிகுந்த நன்மை பெறப்போகும் ராசி. தொட்டதில் வெற்றி, திருமண தடைகள் அகலும், உத்தியோகத்தில் இலக்கை அடைவீர்கள்.
துலாம்
ராகு 5ஆம் இடத்திற்கு வருகிறார். கேது லாபஸ்தானத்தில் வருகிறார். இதன் விளைவாக நினைத்தது நிறைவேறும். எதை செய்ய நினைத்தாலும் நடந்துவிடும். பண கவலை, மன கவலை நீங்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்
அரசியலில் உள்ளவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். கணிசமான பணம் புரளும். சுப காரியங்கள் நடைபெறும். உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்லது நடக்கப் போகிறது.
தனுசு
உங்களுடைய ராசியை ராகு பின் நோக்கி பார்க்கிறார். வளர்ச்சிப் பாதையில் பயணிக்க போகிறீர்கள். பூர்விக சொத்து தகராது அகலும். குருவின் பார்வையும் படுகிறது. எனவே அச்சமில்லாத வாழ்க்கை அமையும். பணியில் மாற்றம் உண்டு. காளஹஸ்தி சென்று வழிபடுங்கள்.
மகரம்
ராகு 2ஆம் இடத்தில் வருவதால் மன கலக்கம், ஆரோக்கியத்தில் சிக்கல், திட்டமிட்டதை செய்வதில் சிரமம் இருக்கலாம். குடும்பத்தினர் உங்களை புரிந்து கொள்ளமாட்டார்கள். ஆன்மிக பாதையில் பயணிக்கவும். துர்க்கையை வழிபட்டால் துயரங்கள் நிச்சயம் தீரும்.
கும்பம்
இல்லற பிரச்னை, குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஜென்ம சனி விலக உள்ளதால் வாழ்க்கையில் பல மாற்றங்கள் வரப்போகிறது. தைரியம் கொண்டு வாழ வேண்டும்.
மீனம்
ராகு 12ஆம் இடத்திற்கு வந்துவிட்டார். குடும்ப பிரச்னை விலகப் போகிறது. நல்ல உத்தியோகம், பொறுப்பு கிடைக்கும். நேர்முக தேர்வில் வெற்றி உண்டு. சுப செலவுகள் அதிகரிக்கும். உயர்ந்த நிலையை அடையப் போகிறீர்கள்.
மேலும் படிங்கதமிழ் புத்தாண்டு ராசிபலன் : மேஷம் டூ மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு எப்படி அமையப் போகிறது ?
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation