herzindagi
image

உங்கள் சருமம் பொலிவு பெற வேண்டுமா? இந்த தேங்காய் எண்ணெய் ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க

தேங்காய் எண்ணெய் கொண்டு ஃபேஸ் பேக் தயாரிக்கும் முறை குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இவை, நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவி செய்கின்றன.
Editorial
Updated:- 2025-11-03, 11:50 IST

முகப்பரு, கருமை நிற திட்டுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் நம் சருமம் பாதிக்கப்படுகிறது. இதற்கு  மாசுபாடு, வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் போன்ற பல காரணங்கள் உள்ளன. உங்கள் சருமத்தின் தன்மையை மேம்படுத்தவும், பிரச்சனைகளை தவிர்க்கவும், நீங்கள் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். 

மேலும் படிக்க: பயோட்டின் குறைபாடா? கவலையே வேண்டாம், உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தும் சத்தான உணவுகள்

 

சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்யை எப்படி பல்வேறு வழிகளில் பயன்படுத்துவது என்று பார்ப்போம். தேங்காய் எண்ணெய் சருமத்தை வறட்சியாகாமல் தடுக்க உதவுகிறது. சரியான முறையில் பயன்படுத்தினால், இது சருமத்தை ஈரப்பதமாக வைத்து, வீக்கத்தை குறைக்கிறது. தேங்காய் எண்ணெய்யில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தேங்காய் எண்ணெய் கொண்டு எப்படி ஃபேஸ் பேக் தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

Coconut oil uses

 

தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்:

 

தயிர் சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. இது லாக்டிக் அமிலம், புரோபயாடிக்குகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது. இது சருமத்தை சுத்தப்படுத்தவும், வெயிலினால் ஏற்பட்ட கருமையை நீக்கவும் உதவுகிறது. இது கரும்புள்ளிகளை குறைத்து, அழுக்கினை சுத்திகரித்து, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

 

சிறிது தயிரை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து, வெயிலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்னர் சாதாரண நீரில் கழுவவலாம். இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க: கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேண்டுமா? அரிசி தண்ணீரை இனி இப்படி யூஸ் பண்ணுங்க

 

தேங்காய் எண்ணெய் மற்றும் இலவங்கப்பட்டை ஃபேஸ் பேக்:

 

சரும வறட்சியை தடுக்க இது ஒரு சிறந்த வழியாகும். இந்த கலவையை உருவாக்க, ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் எடுத்து, அதில் சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். விருப்பப்பட்டால், சிறிது தேனையும் சேர்த்துக் கொள்ளலாம். அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து, உங்கள் முகத்தில் 10 நிமிடங்கள் தடவவும். இது சருமத்திற்கு ஊட்டமளித்து, மந்தமான தன்மையை குறைக்கும்.

Coconut oil benefits

 

எனினும், நீங்கள் முதல் முறையாக சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துகிறீர்கள் என்றால், முதலில் உங்கள் சருமத்தின் ஒரு சிறிய பகுதியில் சோதனை செய்து பார்ப்பது நல்லது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com